காவ்யாவுக்காக பாடிய ரம்யா..!

Bookmark and Share

காவ்யாவுக்காக பாடிய ரம்யா..!

நடிகை ரம்யா நம்பீசன் பாடகியாக மாறி ரொம்ப நாட்களாச்சு. மலையாளத்தில் இவன் மெகாரூபன் என்ற படத்தில் இவர் பாடிய ஆண்டலோண்டே என்ற பாடல் இவரது குரலுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டியது.

அதன் பின்னர் தேசியவிருதுகள் பெற்ற தட்டத்தின் மறயத்து படத்தில் இவர் பாடிய முத்துச்சிப்பி என்ற பாடல் ஒரு காலத்தில் கேரளாவின் தேசியகீதம்போல திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது.

தமிழில் பாடவேண்டும் என்கிற ரம்யா நம்பீசனின் நீண்ட நாள் ஏக்கமும் சுசீந்திரன் - இமான் கூட்டணியில் உருவான பாண்டியநாடு படத்தின் மூலமாக தீர்ந்தது.

லட்சுமி மேனனுக்காக பை பை பை கலாச்சி பை என பாடி அதை வைரலாக்கினார் ரம்யா நம்பீசன் தொடர்ந்து மலையாள படங்களில் அவ்வப்போது பாடிவரும் ரம்யா இப்போது மலையாளத்தில் ஆகாசவாணி என்கிற படத்தில் காவ்யா மாதவனுக்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

பொதுவாக தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலையாவது பாடிவிடும் ரம்யா மற்றவர்களுக்காகவும் நட்பு ரீதியில் அவ்வப்போது பாடி வருவது குறிப்பிடத்தக்கது..


Post your comment





Related News
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions