ராணா படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா!

Bookmark and Share

ராணா படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா!

‘பாகுபலி’, ‘பெங்களூர் நாட்கள்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் என இருமொழிகளிலும் உருவாகும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் ராணா டகுபதி. ‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், ராணா டகுபதியை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

அதேநேரத்தில், தெலுங்கிலும் இவருக்கென்று தனி மவுசு இருப்பதால், இரு மொழிகளில் உருவாகும் படங்கள் என்றால், முதல் நபராக ராணாவைத்தான் அனைவரும் தேர்வு செய்கின்றனர். ராணா டகுபதி நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்தை எஸ்.என்.ராஜராஜன் என்பவர் தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தை ‘கழுகு’, ‘சவாலே சமாளி’ ஆகிய படங்களை இயக்கிய சத்ய சிவா இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும், இப்படத்தில் ராணாவுக்கு யார் கதாநாயகி, மேலும் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!
ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions