உங்கள எங்கயாவது ஜோடியா பார்த்தேன், அம்புட்டுதான்: ஹீரோ, ஹீரோயினை எச்சரித்த இயக்குனர்

Bookmark and Share

உங்கள எங்கயாவது ஜோடியா பார்த்தேன், அம்புட்டுதான்: ஹீரோ, ஹீரோயினை எச்சரித்த இயக்குனர்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகாவை தவிர்க்க விருது விழா ஒன்றை புறக்கணித்துள்ளார். 

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஹாலிவுட் சென்றதில் இருந்தே அவருக்கும், அவரது காதலரான ரன்வீர் சிங்கிற்கும் இடையே பிரச்சனையாக இருந்தது.

அவர் வின் டீஸலுடன் சேர்ந்து நடித்த xXx: ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படம் ஓடவில்லை. இதையடுத்து நாடு திரும்பிய தீபிகா பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா கற்பனையில் வின் டீஸலுடன் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக தெரிவித்தார். இது ரன்வீர் சிங்கை கோபம் அடைய வைத்தது.

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே பிரிந்துவிட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது. அண்மையில் பார்ட்டி ஒன்றுக்கு வந்த ரன்வீர் தீபிகாவை கண்டுகொள்ளவே இல்லை.

டெல்லியில் நடந்த விருது விழாவில் தீபிகா கலந்து கொள்ளக்கூடும் என நினைத்து ரன்வீர் சிங் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். ரன்வீர் தீபிகாவை ஒதுக்கத் துவங்கியுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் பத்மாவதி படத்தில் ராணி பத்மாவதியாக தீபிகாவும், மன்னர் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடிக்கிறார்கள்.

பத்மாவதி, அலாவுதீன் உறவு கொள்ளும் காட்சி உள்ளது என்று நினைத்து கர்ணி சேனா அமைப்பினர் படப்பிடிப்பு தளத்தை சேதப்படுத்தியதுடன் பன்சாலியையும் தாக்கினர். இதையடுத்து தான் தீபிகா, ரன்வீர் எங்கேயும் சேர்ந்து போகக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளாராம் பன்சாலி.


Post your comment





Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions