ஷாரூக் உடனான மோதலை தவிர்த்த ரன்வீர்

Bookmark and Share

ஷாரூக் உடனான மோதலை தவிர்த்த ரன்வீர்

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் கான் நடித்துள்ள தில்வாலே படம் வெளியாகும் நாளன்று, ரன்வீர் சிங் நடித்துள்ள பஜிராவ் மஸ்தானி படம் வெளியாவதாக இருந்தது. இதனிடையே, இந்த மோதலை, பஜிராவ் மஸ்தானி படக்குழு தவிர்த்துள்ளது.

தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளதாக, பஜிராவ் மஸ்தானி படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான காரணமாக, பஜிராவ் மஸ்தானி படக்குழு தெரிவித்துள்ளதாவது, இப்படத்தின் படப்பிடிப்பின் போது, ரன்வீர் சிங்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக, ரன்வீர் சிங்கிற்கு ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டிருந்தது, தற்போது தான், அவர் உடல்நிலை தேறிவருகிறார்.

அவரை கட்டாயப்படுத்தி, படப்பிடிப்பு நடத்த எங்கள் மனம் ஒப்பவில்லை. அவர் பூரணமாக உடல்நலம் அடைந்தபிறகே, அவர் நடிக்க உள்ள காட்சிகளை படமாக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன்காரணமாகவே, படத்தின் ரிலீசை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாரூக் கான், கஜோல், வருண் தவான், கிர்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள தில்வாலே படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.


Post your comment





Related News
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions