ரேகாவுக்கு இன்று 60 வயது: ஆனாலும் அழகு தேவதை...

Bookmark and Share

ரேகாவுக்கு இன்று 60 வயது: ஆனாலும் அழகு தேவதை...

வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை... இந்த வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நடிகை ரேகாவிற்கு பொருந்தும். இன்றைக்கு 60 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை ரேகா, இன்னமும் இளமை மாறாமல் இருக்கிறார்.

இதை அவருடைய சமீபத்திய திரைப்படமான சூப்பர் நானி பார்த்தவர்களுக்குத் தெரியும். சினிமாவிற்கு சிலகாலம் இடைவெளி விட்டிருந்த ரேகா கிரிஷ் 2 படத்தில் நடித்த போதே ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

இப்போது மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின்னர் சூப்பர் நானி படத்தில் நடித்துள்ளார். 1970 களில் பாலிவுட் உலகின் கவர்ச்சி ப்ளஸ் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த ரேகா 15 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத நடிகையாகத் திகழ்ந்தார்.காதல் மன்னன் நடிகர் ஜெமினி கணேசன்- தெலுங்கு நடிகை புஷ்பவள்ளி தம்பதியின் மகளான ரேகா 1966ம் ஆண்டு தெலுங்கில் ரங்குலா ரத்னா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ரேகா.

1969ம் ஆண்டு கன்னடத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 1970 களில் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ரேகா, அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

பின்னர், 1980களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.1990களில் ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் உள்ளிட்ட ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும் நடித்தார்.

பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார் நடிகை ரேகாபாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் ரேகா. அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட திடீர் மோதலால் பிரிந்தனர்.2010ல் பத்மஸ்ரீ விருதும், 4 முறை இந்திய அரசின் விருதையும் பெற்றுள்ளார் ரேகா.2012ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்ட ரேகா சில காலம் நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது சூப்பர் நானி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார்.அமிதாப்பச்சன் நடிக்கும் ஷமிதாப் படத்திலும் நடிக்கிறார் ரேகா. 1981ம் ஆண்டு யாஷ் சோப்ரா இயக்கிய சில்சில்லா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

ஆர்.பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் நடிக்கும் ஷமிதாப் படத்தில் தான் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ரேகா நடிக்க உள்ளார். இதை தனுஷ் உறுதிபடுத்தியுள்ளார்.

இன்று 60 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரேகாவை அவருடன் சூப்பர் நானி படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் வாழ்த்துவதோடு அழகு தேவதை என்று கொண்டாடுகின்றனர்.


Post your comment





Related News
கொடூரமான தெய்வமகள் காயத்ரி அண்ணியார் இப்படிப்பட்டவரா?
மகளை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரேகா.!
இதுவரை யாரும் பார்க்காத பிரபல நடிகை ரேகாவின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!
றெக்க ரிலீஸ் தேதி உறுதியானது !
நடிகை ரேகாவுக்கு யாஷ் சோப்ரா விருது
அடுத்த ஆச்சி இவங்க தான்.. நடிகை ரேகா உருக்கம்
நடித்தது திருப்தியில்லை - படத்திலிருந்து பாதியில் வெளியேறிய ரேகா
அமிதாபின் ஷமிதாபில் ரேகா இருக்கார், ஆனால் இல்லை
தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா
நியமன எம்.பி. பதவி கிடைத்தால் பரிசீலிப்பேன்: நடிகர் அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions