மதுரையில் மாபெரும் தொகைக்கு விற்பனையான ரெமோ!

Bookmark and Share

மதுரையில் மாபெரும் தொகைக்கு விற்பனையான ரெமோ!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் வியாபாரமும் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இப்படத்தின் கோவை உரிமையை சீனியர் விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து வாங்கியிருந்தார்.

அதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் மதுரை உரிமையை பிரபல சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் உயர்ந்த தொகையை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions