தூக்கு தண்டனை கைதியின் பேச்சால் கொந்தளித்த ரீமா கல்லிங்கல்.!

Bookmark and Share

தூக்கு தண்டனை கைதியின் பேச்சால் கொந்தளித்த ரீமா கல்லிங்கல்.!

இயற்கையாகவே தனது மனதிற்கு சரியென்று படும் துணிச்சலான கருத்துக்களை அவ்வப்போது சூடான ஸ்டேட்மேன்ட்டுகளாக வெளியிடுபவர்தான் மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல்.

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான '22 ஃபீமேல் கோட்டயம்' படத்தில் ரீமா கல்லிங்கல் தன்னை ஏமாற்றிய காதலனுக்கு 'வித்தியாசமான' தண்டனை கொடுக்கும் துணிச்சலான வேடத்தில் நடித்தபின் அவரது பேச்சில் தன்னம்பிக்கையும் உக்கிரமும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது.

டில்லி மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முகேஷ் சிங் என்பவன் சமீபத்தில் “பலாத்காரத்துக்கு ஆணை விட பெண்ணுக்கே அதிக பொறுப்பு உள்ளது.

தூக்கு தண்டனை வழங்கினால், எதிர்காலத்தில் இதைவிட மோசமான பலாத்காரம் நடக்கும்" என்று பேட்டி அளித்துள்ளான். அவனின் இந்த ஆணவ பேச்சு பலரையும் போல ரீமா கல்லிங்கல்லையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

இது குறித்து தனது உணர்வை வெளிப்படுத்தும் விதமாக “மாணவி நிர்பயாவின் மரணத்துக்கு காரணமான அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான்.. பிற்பாடு அவன் இந்திய தெருக்களில் சுதந்திரமாக கூட உலாவரக்கூடும்.. பெஸ்ட் ஆப் லக் லேடீஸ்” என நமது நாட்டு சட்ட அமைப்பை பற்றி விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்..! 


Post your comment

Related News
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
பாலியல் குற்றவாளியை பாதுகாக்கிறது மலையாள நடிகர் சங்கத்தை விளாசிய ரீமா கல்லிங்கல்
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: ரீமா கல்லிங்கல்
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions