காவிரி பிரச்சினையில் நாம் செய்யவேண்டியது என்ன? : ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

Bookmark and Share

காவிரி பிரச்சினையில் நாம் செய்யவேண்டியது என்ன? : ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

தனியார் எப்ஃஎம்.மில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, முதல் ஆளாக களமிறங்கி பல்வேறு உதவிகளை செய்தவர். சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய நபர்களில் ஆர்.ஜே.பாலாஜியும் குறிப்பிடத்தக்கவர்.

இந்நிலையில், காவிரி பிரச்சினையால் கர்நாடகா மற்றும் சென்னையில் நடந்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, இரண்டு மூன்று நாட்களாக காவிரி பிரச்சினையை வைத்து சென்னையிலும் சரி, பெங்களூரிலும் சரி நடந்துகொண்டிருக்கிற விஷயங்கள் எல்லாம் ரொம்பவும் கேவலமாக இருக்கிறது. இது யார் பண்ணுகிறார்கள்? எதற்காக பண்ணுகிறார்கள்? என்றால், நாம் எல்லோரும் ஒரு நொடி யோசித்தாலே தெரியும்.

தனியார் பேருந்துகளை தீ வைத்து கொளுத்தியது கர்நாடகாவில் சாதாரணமாக நம்மை போன்ற ஆட்கள் கிடையாது. அதேபோல், சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலை அடித்து உடைத்தது சென்னையில் உள்ள சாதாரண நம்மை போன்ற ஆட்கள் கிடையாது. இந்த பிரச்சினை ஓயக்கூடாது. இதை இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி பண்ணி மொழியை வைத்து அரசியல் செய்யவேண்டும். மொழியை வைத்து லாபம் தேடிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இதையெல்லாம் செய்கிறார்கள்.

கர்நாடகத்தின் பெருமை, தமிழகத்தின் பெருமைன்னு சொல்லிக்கொண்டு அங்கும், இங்கும் பொழைப்பு நடத்தவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும்தான் இதை செய்துகொண்டு வருகிறார்கள். இது ரொம்ப வருடமாக நடந்து வருகிறது. இப்போது மறுபடியும் இந்த வருடமும் தொடங்கியிருக்கிறார்கள். 

எனவே, சாதாரண மக்களாகிய நீங்களும், நானும் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சமூக இணையதளங்களில் யாராவது ஒருத்தனை போட்டு பத்து பேர் அடிப்பது போன்ற கண்றாவியான வீடியோவை போடுவது, அந்த வீடியோவை 100 பேர் ஷேர் செய்வது, அதுக்கு இன்னொருத்தர் ஒத்தைக்கு ஒத்தை வர்றியா, கர்நாடகா வீரம்னா என்னன்னு தெரியுமா, தமிழகத்தின் வீரம்னா என்னன்னு தெரியுமா? உங்க நடிகர் அப்படி இருக்காங்க... எங்க நடிகர் இப்படி இருக்காங்க.. என்று முட்டாள்தனமாக பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். 

யாரோ ஒருத்தர் பிரச்சினையை உண்டாக்கவேண்டும் என்று போடுகிற சண்டையில் நாம் எதற்கு ரியாக்ட் செய்யவேண்டும். கர்நாடகத்தில் உள்ளவங்க நிறைய பேர் நம்மூரில் வெள்ளம் வந்தப்போ நிறைய கொடுத்து உதவியிருக்கிறார்கள். 

அதுதான் கர்நாடகாவில் இருக்கிற சாதாரண மக்களின் மனசு. கர்நாடகாவுல இருக்கிற சில பைத்தியங்களும், நம்ம ஊர்ல இருக்கிற சில பைத்தியங்களும்தான் இந்த மாதிரி பிரச்சினையெல்லாம் செய்கிறார்கள். அவர்களெல்லாம் தைரியமாக வெளியில் சுற்ற முடியாது. அவர்களை அரசாங்கம் கண்டிப்பாக கைது செய்யும். நாம் சமூக இணையதளங்கள் வாயிலாக இந்த பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசாமல் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இருப்போம்..


Post your comment

Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions