ரசிகனை திருட்டு விசிடி வாங்க வைத்தது நாம் தான் - ஆர்.கே. பேச்சு

Bookmark and Share

ரசிகனை திருட்டு விசிடி வாங்க வைத்தது நாம் தான் - ஆர்.கே. பேச்சு

சினிமாவில் வெற்றி விழா கொண்டாடிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. காரணம் இப்போது எந்தப் படமும் 50 நாள், 100 நாள் ஓடுவதில்லை. சில பெரிய ஹீரோக்கள் படம் ஓட்டப்பபடுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான என் வழி தனி வழி படம் கமலா தியேட்டரில் 25 நாள் ஓடியது. இதனை கொண்டாடி மகிழ்ந்தார், படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான ஆர்கே.

விழாவில் ஆர்கே பேசியதாவது:

கடந்தசில ஆண்டுகளாகவே சினிமா சிரமத்தில் இருப்பதாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிறைய படங்கள் வருகின்றன. நிறைய படங்கள் தோல்வி அடைகின்றன. ஓடுவதில்லை. சூப்பர் ஸ்டாரிடமே பணத்தை திருப்பிக் கேட்கிற நிலை உள்ளது. வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களுக்கே திரையரங்கிற்கு யாரும் வருவதில்லை.

நாலாவது நாள் நல்லபடம் என்று கேள்விப் பட்டுப் பார்க்கப் போனால் கூட, படம்  திரையரங்கில் இருப்பதில்லை. எல்லா வியாபாரத்திலும்  விழா, பண்டிகை காலங்களில் 60 சதவிகிதம் வரை தள்ளுபடி  கொடுக்கிறார்கள். சினிமாவில் மட்டும் பண்டிகை காலங்களில்,100 ரூபாய் டிக்கெட் 300 ரூபாய் ஆகும்.

3 நாள் பொறுத்துக் கொண்டால் 4 வது நாள் திருட்டு விசிடி வந்துவிடும். 25 ரூபாயில் பார்த்து கொள்ளலாம் என்று திரும்பி  வந்து விடுகிறான். அவனைத் திருட்டு விசிடி வாங்கவைத்தது நாம்தான். சினிமாவில் அணுகுமுறை மாற வேண்டும். இதுவரை பணக்காரர்களிடம் இருந்த சினிமா வியாபாரம் இனி ஏழைகள் பக்கம் போகட்டும். இவ்வாறு ஆர்கே பேசினார்.

விழாவில்  என்வழி தனி வழி இயக்குநர் ஷாஜி கைலாஷ், கதை வசனகர்த்தா பிரபாகர், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் ராதாரவி,மதன்பாப், தலைவாசல்விஜய், வழக்கு எண் முத்துராமன், ரமேஷ் கண்ணா,  தயாரிப்பாளர்  ஞானவேல், இயக்குநர்கள் சுசீந்திரன், தசெந்தில்நாதன் ,பாடலாசிரியர் இளைய கம்பன், நடிகைகள் நீது சந்திரா, கோமல் சர்மா, ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.


Post your comment





Related News
விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ் 3-ல் இணைந்த நேர்கொண்ட பார்வை நடிகை; யார் தெரியுமா?
நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்!
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
நேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸ் தேதி, நேரம் இதோ – மரண மாஸ் அப்டேட்!
ரசிகர்களை சோகமாக்கிய நேர்கொண்ட பார்வை படக்குழு, பதில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை - முழு விவரத்துடன் இதோ.!
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் - நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் உருக்கமான டிவீட்!
தல பிறந்தநாள் ஸ்பெஷலாக நேர்கொண்ட பார்வை டீசர் நாளை வருகிறதா? உறுதியானத் தகவல் இதோ!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions