ஜே.கே.ரித்தீஷ், பவர் ஸ்டார் வரிசையில் ஆர்கே..!

Bookmark and Share

ஜே.கே.ரித்தீஷ், பவர் ஸ்டார் வரிசையில் ஆர்கே..!

திறமையும், அதை வெளிப்படுத்த சரியான வாய்ப்பும் கிடைத்தால் சினிமாவில் நிச்சயம் வெற்றியடையலாம். அதிர்ஷ்டம் இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.

திறமை, அதிர்ஷ்டத்தை நம்பாமல் குறுக்கு வழியை நம்புகிறவர்களும் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களின் பணத்தை வைத்து பப்ளிசிட்டி செய்து சினிமாவில் வெற்றியடைய முடியும் என்று நம்புகிறார்கள்.

இப்படி குறுக்கு வழியை நாடியவர்களில் பல பேர் பணத்தை இழந்துவிட்டு காணாமலே போய்விட்டனர். எனினும்  ஜே.கே.ரித்தீஷ், பவர் ஸ்டார் போன்றவர்களுக்கு இந்த ஃபார்முலா வெற்றியையும் கொடுத்தது.

தன்னிடமிருந்த பணத்தை தண்ணீராக செலவு செய்தார் ஜே.கே.ரித்தீஷ். அதன் காரணமாக திரையுலகில் அவருக்கு அடையாளம் கிடைத்தது. எம்.பி.ஆகும் அளவுக்கு அரசியலிலும் உயர்வு கிடைத்தது.

பவர்ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு பணப்பெட்டியோடு படத்துறைக்கு வந்த அக்கு பஞ்சர் டாக்டர் சீனிவாசன் ஆரம்பத்தில் கோமாளியாகத் தெரிந்தார். அதுவே அவருக்கு காமெடியன் இமேஜையும் பெற்றுத்தர, ஷங்கர் படத்தில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

ஜே.கே.ரித்தீஷ், பவர் ஸ்டார் இருவருமே தங்களின் படம் தியேட்டரில் ஓடும்போது தங்களின் செலவில் ஆட்களை தியேட்டருக்கு அனுப்பி படம் பார்க்க வைப்பார்கள். விழா எடுத்தால் ஊரிலிருந்து ஆட்களை வர வைப்பார்கள். இவர்களின் வழியில் நடிகர் ஆர்கேவும் நடைபோட ஆரம்பித்துவிட்டார்.

சில தினங்களுக்கு முன் என் வழி தனி வழி படத்தின் 25 ஆவது நாள் விழாவை சென்னையில் நடத்தினார். அதற்காக தன் ஊரிலிருந்து நான்கைந்து பஸ்களில் ஆட்களை அழைத்து வந்தார். வந்தவர்களுக்கு பிரியாணி, குவார்ட்டர், கை செலவுக்கு பணம்  கொடுத்திருக்கிறார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions