காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்

Bookmark and Share

காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கடந்த 14-ந் தேதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதில் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்தனர்.

இவர்களது குடும்பங்களுக்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.

குண்டுவெடிப்பில் இறந்த அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரைச் சந்தித்த நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் ‘ரோபோ’ சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘நான் சினிமாக்காரன். என்னிடம் சினிமா சார்ந்த வி‌ஷயங்களை இந்த இடத்தில் எதுவும் கேட்க வேண்டாம். நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டிற்கு வந்திருக்கிறேன்.

’இன்றைக்கு நாம் குடும்பத்துடன் சந்தோ‌ஷமாக இருக்கிறோம் என்றால் அதற்கு இவர்களைப் போன்ற எல்லைசாமிகள் தான் காரணம். இன்றைக்கு நமது தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்களை நாம் இழந்து நிற்கிறோம். இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும்.

இக்குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பதே தெரியவில்லை. சிவசந்திரனால் மட்டுமே இந்த குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர் பிரிவு என்பது ஈடுசெய்ய முடியாதது. இந்தக் குடும்பத்துக்கு என்னால் ஆன சிறு உதவியை வழங்க எண்ணினேன்.

அவரது தாயாரிடம் பேசும்போது என் மகன் நாட்டுக்காக உயிரை விட்டுள்ளார். அது எனக்கு பெருமைதான் என அவர் தாய் கூறும்போது பெருமையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment

Related News
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
கண்ணீரில் மிதந்த ரோபோ ஷங்கரின் மகள்! மனைவி அழுகை
தெலுங்கு சினிமாவிற்கு சென்ற தனுஷ் பட காமெடியன்- யார் அவர் தெரியுமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions