டண்டணக்கா பாடல் இல்லாமல் ரோமியோ ஜூலியட்.?!

Bookmark and Share

டண்டணக்கா பாடல் இல்லாமல் ரோமியோ ஜூலியட்.?!

தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல் தன் வாயாலேயே தன் படத்துக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்துள்ள 'ரோமியோ ஜூலியட்' படத்தில் நடிகர் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகரக நடிக்கிறார் ஜெயம் ரவி.  

எனவே  டி.ராஜேந்தர் தனது படங்களில் பயன்படுத்தும் 'டண்டணக்கா...' என்ற வார்த்தையை பயன்படுத்தி இப்படத்திற்காக ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது. டி.இமான் இசை அமைப்பில், அனிருத் பாட, 'டங்கா மாரி' புகழ் ரோகேஷ் எழுதிய  இப்பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் பாடலை வைத்து  டி.ராஜேந்தரை தவறாக சித்தரித்து, சிலர் உருவாக்கியுள்ள வீடியோ இணையதளங்களில் வெளியானது.  இதை பார்த்து ஜெயம் ரவி தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

'டண்டணக்கா'  பாடல் டி.ராஜேந்தரை பெருமைப்படுத்துவதாக உள்ளது என்று விளக்கம் சொன்னார். இந்நிலையில் டி.ராஜேந்தர் இப்போது 'ரோமியோ ஜூலியட்' படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

அதில் 'டண்டணக்கா' பாடலை தொடர்ந்து ஒலிபரப்பவும், புரொமோஷன் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இதனால் 'ரோமியோ ஜூலியட்' படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டண்டணக்கா பாடலை படமாக்க தயாராகி வந்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அதுமட்டுமல்ல டி.ராஜேந்தர் எதிர்ப்பு காரணமாக டண்டணக்கா பாடல்காட்சியை படமாக்கும் திட்டத்தை தற்போது கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

கோர்ட்டில் சாதகமாக தீர்ப்பு கிடைத்தால் படத்தில் பாடலை இணைப்பது அல்லது, டண்டணக்கா பாடல் இல்லாமல் ரோமியோ ஜூலியட் படத்தை ரிலீஸ் செய்வது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் - அதுல்யா ரவி
தேவர் மகன் படத்துக்கும் ஜெயம் ரவி படத்துக்கும் இப்படியொரு தொடர்பா?
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions