பாலியல் குற்றவாளிகளுக்கு மரணத்தை விட கொடிய தண்டனை! - ரு பட டைரக்டர் சதாசிவம் பேச்சு

Bookmark and Share

பாலியல் குற்றவாளிகளுக்கு மரணத்தை விட கொடிய தண்டனை! - ரு பட டைரக்டர் சதாசிவம் பேச்சு

இர்பான், ரக்ஷிதா, பேரரசு, ஆதவன், மீராகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள படம் ரு. இப்படத்தை டைரக்டர் திருமலையிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்ற சதாசிவம் இயக்கியுள்ளார்.

பி.ஆர். ஸ்ரீநார்த் இசையமைத்துள்ள இப்படத்துக்கு எல்.வி.கே. தாஸ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.

விழாவில், வி.ஜி.பி.சந்தோசம், டைரக்டர்கள் பேரரசு, ரவி மரியா, ரமேஷ்கண்ணா மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ரு பட டைரக்டர் சதாசிவம் பேசுகையில், ரு என்றால் தமிழில் ஐந்து என்று பொருள்படும். அந்த வகையில், ஐந்து தவறான பையன்களைப்பற்றிய கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது.

இன்றைக்கு நாட்டில் பரவலாக நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்திதான் இப்படம் தயாராகியுள்ளது. இதே போன்ற கதையில் எத்தனையோ படங்கள் வந்து கொண்டிருந்தாலும் இப்படம் ரொம்ப புதுசாக இருக்கும்.

அதாவது, பாலியல் குற்றம் செய்து விட்டு ஜெயிலில் இருக்கும் ஒருவன், எதற்காக 9 மணிக்கு மேல் ஒரு பெண் வெளியில் வரவேண்டும் என்கிறான். இன்னொருவன் பாலியல் குற்றங்களுக்கு பெண்கள்தான் காரணம் என்கிறான்.

அந்த அளவுக்கு தவறையும் செய்து விட்டு திமிராக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை என்ன என்பதை சொல்ல வருவதுதான் இந்த ரு படம்.

அதாவது பாலியல் குற்றவாளிகளுக்கு மரணத்தை விட ஒரு கொடிய தண்டனையை இந்த படத்தில் கொடுத்திருக்கிறோம். அந்த க்ளைமாக்ஸ் நெஞ்சை பதற வைக்கும் வகையில் இருக்கும்.

முக்கியமாக அரபு நாடுகளைப்போன்று நம் நாட்டிலும் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் படமாக இப்படம் இருக்கும். மேலும், இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக காசி, முதுமலை என வித்தியாசமான லொகேசன்களில் படமாக்கியிருக்கிறோம்.

அதோடு, க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக 15 கிலோ வெயிட் போட்டு நடித்த இர்பான், அந்த லொகேசன்களில் தனக்கு அலர்ஜி ஏற்பட்டதால் அதை தடுக்க வெல்லம் சாப்பிட்டுக்கொண்டே நடித்தார். குறிப்பாக, சண்டை காட்சிகளில் டம்மியாக அடிக்காமல், நிஜமாலுமே அடிவாங்கி அடிகொடுத்து நடித்தார் இர்பான் என்கிறார் டைரக்டர் சதாசிவம்.

 


Post your comment

Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
கந்துவட்டி கும்பலுடன் எனக்கு தொடர்பா? - கருணாகரன் விளக்கம்
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உண்மை சம்பவம்- கந்துவட்டி தற்கொலை “பொதுநலன்கருதி”!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions