டப்பிங் படங்களுக்கு தமிழ்நாட்டில் தடை… பின்னணியில் ருத்ரமா தேவி

Bookmark and Share

டப்பிங் படங்களுக்கு தமிழ்நாட்டில் தடை… பின்னணியில் ருத்ரமா தேவி

மகேஷ் பாபு, ராம் சரண், அஜித், விஜய், சூர்யா ஆகியோருக்கு மற்ற மொழிகளில் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தால் அவர்களின் படங்கள் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த வரிசையில் சில இயக்குனர்களும் அடங்குவர்.

அஞ்சான், புலி, பூஜை, ஆம்பள போன்ற படங்கள் தமிழில் விமர்சன ரீதியாக சிக்கல்களில் சிக்கினாலும் மற்ற மாநிலங்களில் இப்படங்கள் நல்ல வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் ”850 திரையரங்குகளை டப்பிங் படங்களே ஆக்கிரமித்துள்ளன. தமிழ் நாட்டில் தமிழ்ப் படங்களுக்கு தற்போது திரையரங்குகள் கிடைத்த பாடில்லை.

இதனால் உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக முதல்வர், வேற்று மொழி சார்ந்த டப்பிங் படங்களை, கர்நாடகா பாணியில் தமிழ் நாட்டிலும் தடை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் அவர் இப்படி ஒரு கோரிக்கை வைக்க காரணம் என்னவென்றால் அவருடைய அதிரடி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட அதேநாளில் ருத்ரமாதேவி படம் வெளியாக இருப்பதுதானாம்.


Post your comment





Related News
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions