தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த ருத்ரமாதேவி!

Bookmark and Share

தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த ருத்ரமாதேவி!

தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்ரமாதேவி திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் 2D மற்றும் 3D முறையில் வெளியாகியிருக்கிறது. பாகுபலிக்குப் பின்னர் அனுஷ்கா ராணியாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ருத்ரமாதேவி.

முன்னணி நடிகர்களுக்கு இணையாக இந்தப் படத்தில் ராணியாக நடிப்பில் அசரடித்திருக்கிறார் அனுஷ்கா. தமிழில் சற்று தாமதமாக வெளியாகியிருக்கும் ருத்ரமாதேவி ரசிகர்களைக் கவர்ந்ததா என்று பார்க்கலாம்.

அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், நித்யாமேனன், கேத்தரின் தெரசா ஆகியோரின் நடிப்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ருத்ரமாதேவி திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டிருக்கிறது. 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ளது.

தமிழில் ஒரு வாரம் கழித்து இன்று ருத்ரமாதேவி வெளியாகி இருக்கிறது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாதது, சரித்திரப் படம் மற்றும் 3D முறை ஆகியவற்றால் நாளை மற்றும் அதற்கடுத்த நாளில் குடும்பத்துடன் ரசிகர்கள் வருவார்கள் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.


Post your comment





Related News
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions