ரூபா மஞ்சரியின் மனசு வலிக்கிறதாம்!

Bookmark and Share

ரூபா மஞ்சரியின் மனசு வலிக்கிறதாம்!

இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படங்கள் பல ஏற்கனவே வந்து விட்டபோதும் தற்போது கழுகு சத்யா சிவா இயக்கத்தில் சிவப்பு என்ற படமும் வர உள்ளது. நவீன் சந்திரா-ரூபா மஞ்சரி காதலர்களாக நடித்துள்ள இந்த படத்தில் ராஜ்கிரண் ஒரு கோனார் வேடத்தில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும், இதில் ரூபா மஞ்சரி இலங்கையில் இருந்து தமிழுக்கு வந்த அகதியாக நடித்துள்ளார். இந்த வேடத்துக்காக சித்தரிக்கப்பட்டுள்ள அவரது வேடம் நிறைய துயரங்களையும், வறுமைகளையும் வெளிப்படுத்த வேண்டுமாம்.

அதனால் அந்த கேரக்டராகவே வாழ்ந்துகாட்ட நினைத்த ரூபா மஞ்சரி, தனக்கு இலங்கை தமிழை சொல்லிக்கொடுத்த இலங்கை பெண்ணிடம் அவர்கள் போர்முனையில் சந்தித்த துயரங்களையும், வறுமைகளையும் கேட்டறிந்து அதை தனது மனதில் சுமந்தபடி நடித்துள்ளாராம்.

இதுபற்றி ரூபா மஞ்சரி கூறுகையில்,

இதற்கு முன்பு நான் நடித்த படங்களில் சாதாரணமான வேடங்களில்தான் நடித்தேன். ஆனால் இந்த படத்தில் ஒரு வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறேன். இது எனக்கு பெரிய மனநிறைவை தந்திருக்கிறது.

அதேசமயம், இலங்கை தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவித்து வரும் கொடுமைகளை கேட்டறிந்தது என மனதில் நிழலாடியபடி வாட்டி எடுத்துக்கொண்டேயிருக்கிறது.

சொந்த மண்ணைவிட்டு அந்நிய தேசத்துக்கு வந்து அவர்கள் அல்லாடிக்கொண்டிருக்கும் அந்த வாழ்க்கையை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. மனசு கடுமையாக வலிக்கிறது.

அதனால் இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்ற நான் ஆண்டவனை மனதார வேண்டிக்கொண்டு வருகிறேன் என்கிறார் ரூபா மஞ்சரி.


Post your comment





Related News
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
விஜய்யின் அடுத்த படம் இவரோடா? பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் கூட்டணி
இராணுவ உடையில் வலைதளத்தில் கலக்கும் கமல்ஹாசன்
மெர்சல்-ல இதெல்லாம் இருக்காது - எடிட்டர் ரூபன் ஓபன் டாக்.!
படத்துல நடிக்காம ஸ்டேஜ்ல நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.. போட்டுத்தாக்கும் கரு பழனியப்பன்
சிவகார்த்திகேயன் செய்வது ட்ராமா- வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
திருப்பதி பிரதர்ஸுக்கு புதுப்படம் நடித்துத் தரும் கமல்
இப்படியும் ஒரு நடிகை
ஏப்ரல் மாதம் திருப்பதி பிரதர்ஸ் மாதம்
தியேட்டர்களுக்காக முட்டி மோதும் தயாரிப்பாளர்கள்... இன்று ஒரே நாளில் 11 படம்!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions