நடிகர் ஷாகித் கபூருக்கு மாநகராட்சி நோட்டீசு

Bookmark and Share

நடிகர் ஷாகித் கபூருக்கு மாநகராட்சி நோட்டீசு

டெல்லி, மும்பை நகரங்களில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவிய படி உள்ளது.

மும்பையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு பிரபல இந்தி நடிகை வித்யா பாலனும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கி இருப்பதை மும்பை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.

நடிகை வித்யாபாலன் மும்பையின் புகழ் பெற்ற ஜூகு கடற்கரை பகுதியில் “பிரனிதா அபார்ட்மெண்ட்ஸ்” எனும் அடுக்கு மாடிக்குடியிருப்பில் வசித்து வருகிறார். “ககானி-2” படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த அவர் இந்த வார தொடக்கத்தில் மும்பை திரும்பினார். அடுத்த நாளே அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

ரத்தப் பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்திருப்பது தெரிய வந்தது. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறாத அவர் வீட்டிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மும்பை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நடிகை வித்யாபாலன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் தரை தளத்திலும், மொட்டை மாடியிலும் தேங்கியிருந்த தண்ணீரில் கொசு உற்பத்தி ஆகி இருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளம் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த வீடு பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூருக்கு சொந்தமானதாகும். அவர் அந்த தரை தளம் வீட்டுக்குள் அதிநவீன சொகுசு நீச்சல் குளம் வைத்துள்ளார். கடந்த 2 மாதமாக அந்த நீச்சல் குளத்தை நடிகர் ஷாகித் கபூர் பயன்படுத்தாமல் வைத்துள்ளார்.
இதனால் அந்த குளத்தில் கொசு உற்பத்தி காணப்படுகிறது. அதில் உருவான ஏடீஸ் கொசுக்கள் கடித்ததால் தான் நடிகை வித்யாபாலனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏனெனில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வித்யாபாலன் வசிக்கிறார். தரை தளத்தில் உள்ள ஷாகித்கபூர் நீச்சல் குளத்தில் உருவான கொசுக்கள் அந்த அபார்ட்மெண்ட்சில் உள்ளவர்களை கடிப்பதாக கடந்த சில வாரங்களாக புகார் கூறப்பட்டது. எனவே வித்யாபாலனுக்கு டெங்கு காய்ச்சல் வர, ஷாகித்கபூர் பயன்படுத்தாத நீச்சல்குள கொசுக்களே காரணம் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.

மேலும் வித்யாபாலன் வீட்டில் மேல்தளத்தில் வசிக்கும் மீராபடேல் என்பவர் வீட்டிலும் கொசு உற்பத்தியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நடிகர் ஷாகித் கபூருக்கும், மீரா படேலுக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.

மாநகராட்சி சட்டம் 1888 பிரிவு 381(பி)-ன் கீழ் அந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நடிகர் ஷாகித் கபூருக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்ததாக கூறி மும்பை மாநகராட்சி இதுவரை 13,593 பேருக்கு அபராதம் விதித்து ரூ. 27 லட்சம் வசூல் செய்துள்ளது.


Post your comment

Related News
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions