படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா

Bookmark and Share

படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா

நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன. சிறுத்தை கணேஷ் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நைட் கிளப் ஒன்றில் ரவுடிகளுடன் தன்ஷிகா சண்டையிடும் காட்சியை படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்த போது நடிகை தன்ஷிகா டூப் போடாமல் ஒரிஜினலாக நடித்துள்ளார். 

அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் தன்ஷிகா நடிக்கும் காட்சி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. பின்னர் படப்பிடிப்பு நடந்த போது டைமிங் மிஸ் ஆனதால் தன்ஷிகாவின் இடது கண்ணுக்கு கீழே பீர் பாட்டில் குத்தியது.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.


Post your comment





Related News
என்.ஜி.கே தோல்வி குறித்து முதன் முறையாக மனம் திறந்த சூர்யா - வைரலாகும் பதிவு!
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
என்.ஜி.கே ரிலீஸ் நேரத்தில் சூர்யா ரசிகர்களுக்கு வந்த திடீர் சோதனை
ஒரு வார்த்தையில் விஜய்யை புகழ்ந்த சாய் பல்லவி - வைரலாகும் செய்தி!
சாய் பல்லவியை இப்படியெல்லாம் டார்ச்சர் செய்தாரா செல்வராகவன் - வெளிவந்த உண்மை!
அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ!
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா? முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!
படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions