ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து தன் படத்தை திரும்ப பெற்றார் சலீம்குமார்..!

Bookmark and Share

ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து தன் படத்தை திரும்ப பெற்றார் சலீம்குமார்..!

மலையாளத்தில் தேசியவிருது பெற்ற, காமெடி கம் குணச்சித்திர நடிகரான சலீம்குமார் ’கம்பார்ட்மென்ட்’ என்கிற படம் மூலம் இயக்குனராக மாறி அந்த படத்தை கடந்த வாரம் ரிலீஸும் செய்தார்.

இந்த நிலையில் கடந்தவாரம் வெளியான இந்தப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பில்லை.. தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்களிடம் முகத்தை சுருக்க, அவர்களோ சலீம்குமாரிடம் சென்று கையை பிசைந்திருக்கிறார்கள்.  

அதனால் படம் ரிலீஸான ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து தனது படத்தை திரும்ப பெற்று வருகிறார் சலீம்குமார். இந்தப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 75 லட்சம் தான்.

இந்தப்படத்தில் நடித்த சுரேஷ்கோபி, கலாபவன் மணி, கே.பி.ஏ.சி.லலிதா உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டார்களாம். காரணம் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மையப்படுத்தி, இந்தப்படத்தை உருவாக்கினார் சலீம்குமார்.

என்னுடைய கம்பார்ட்மென்ட் படம் சராசரி மனிதனை படம்பிடித்து காட்டியிருக்கிறது. ஆனால் மலையாள ரசிகர்கள் கண்ணாடியில் பிரதிபலிக்கும் தங்களது உருவத்தை பார்ப்பதற்கே பயப்படுகிறார்கள்.

தமிழ்ப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மலையாளத்திற்கு இல்லை என்கிற சலீம்குமார், சித்திரை விஷுவுக்கு பின்னர் மீண்டும் இந்தப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளாராம். அதற்கு தியேட்டர்களுக்கு விருப்பமில்லை என்றால் ஊர் ஊராக சென்று புரோஜெக்டர் வைத்தாவது இந்தப்படத்தை ஓட்டுவேன் என்கிறார் சலீம்குமார்.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions