பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க கற்பூரம்-ஏலக்காய் பொடியை முகர்ந்து பார்க்கும் சல்மான் கான்

Bookmark and Share

பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க கற்பூரம்-ஏலக்காய் பொடியை முகர்ந்து பார்க்கும் சல்மான் கான்

நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானதையடுத்து அவருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த சல்மான் கான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கற்பூரத்தை முகர்ந்து கொண்டிருக்கிறாராம்.

ராஜ்ஸ்ரீ ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் பிரேம் ரத்தன் தன் பாயோ நடித்தில் சல்மான் கான், சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். படத்தில் சல்மான் கானின் தங்கையாக ஸ்வரா பாஸ்கர் நடிக்கிறார்.

கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கொண்டலில் நடந்து வருகிறது.படப்பிடிப்பில் கலந்து கொண்ட சோனம் கபூருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர்.சோனம் கபூரின் தாய் சுனிதா ராஜ்கோட் சென்று தனது மகளை விமான ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்கு அழைத்து வந்து அங்குள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகிவிட்டதையடுத்து பிரேம் ரத்தன் தன் பாயோ படக்குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

சல்மான் கான் தனக்கு பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க கற்பூரம், ஏலக்காய் கலந்த பொடியை அவ்வப்போது முகர்ந்து கொண்டிருக்கிறாராம்.கொண்டல் அரண்மனை மற்றும் தோட்டத்தில் தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கொண்டல் மகாராணி குமுத் குமாரி தான் சல்மான் கானை கற்பூரை பொடியை முகர்ந்து பார்க்குமாறு கூறினாராம்.படக்குழுவினர் அனைவரும் மாஸ்க் அணிந்துள்ளனர். நடிகர், நடிகைகள் கேமராவுக்கு முன் வரும்போது மட்டும் மாஸ்கை அகற்றிவிடுகிறார்களாம்.


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions