மான் வேட்டை வழக்கு: நடிகர் சல்மான்கானுக்கு எதிராக மேலும் சில சாட்சிகளை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்

Bookmark and Share

மான் வேட்டை வழக்கு: நடிகர் சல்மான்கானுக்கு எதிராக மேலும் சில சாட்சிகளை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், அதை பயன்படுத்தி மான்களை வேட்டையாடியதாகவும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.

ஆனால் அன்றைய தினம் நீதிமன்றத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர், சல்மான்கானுக்கு எதிராக மேலும் சில சாட்சிகளை விசாரிப்பது தொடர்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு அரசு தரப்பு அனுமதி கோரியது என்றும், கடந்த 9 வருடங்களாக அரசு தரப்பு விடுத்த இக்கோரிக்கை குறித்து நீதிமன்றம் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இதையடுத்து அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படாமல் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அரசு தரப்பு கூடுதல் சாட்சிகளை ஆஜர்படுத்தவும், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யவும் ஜோத்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற திரைப்பட படப்பிடிப்பிற்காக ஜோத்பூர் வந்திருந்த சல்மான் 3 மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions