கார் விபத்து வழக்கில் 5 ஆண்டு ஜெயில்: சல்மான்கான் ஜாமீன் நீட்டிக்கப்படுமா?

Bookmark and Share

கார் விபத்து வழக்கில் 5 ஆண்டு ஜெயில்: சல்மான்கான் ஜாமீன் நீட்டிக்கப்படுமா?

மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த 2002–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந் தேதி சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான்கான் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது சல்மான்கான் குடிபோதையில் இருந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது 2003–ம் ஆண்டு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி தேஷ்பாண்டே தீர்ப்பு கூறினார். விபத்து ஏற்படுத்தியதற்காக சல்மான்கானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதற்காக 2 மாத ஜெயில் தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். காலை 11.15 மணிக்கு சல்மான்கான் குற்றவாளி என அறிவித்த நீதிபதி பகல் 1.25 மணிக்கு அவருக்கான தண்டனை விவரத்தை அறிவித்தார்.

தண்டனையை கேட்டதும் சல்மான்கான் கண்ணீர் விட்டார். சோகத்துடன் காணப்பட்டார். முன்னதாக சல்மான்கானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக கோர்ட்டில் வக்கீல் மனுதாக்கல் செய்தார். மருத்துவ சான்றிதழ்களையும் அதனுடன் இணைத்து இருந்தார். எனவே ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டு இருந்தார். தீர்ப்பு கூறப்பட்டதும் சல்மான்கான் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு தீர்ப்பு நகல் 2 பக்கமே வழங்கப்பட்டது. முழு தீர்ப்பு நகல் வழங்கினால் தான் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே சல்மான்கான் சார்பில் மூத்த வக்கீல் ஹரீஸ் சால்வே மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் தீர்ப்பு நகல் 2 பக்கமே வழங்கப்பட்டுள்ளது. எனவே சல்மான்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வக்கீல் கோரிக்கை விடுத்தார். அதற்கு அரசு வக்கீல் சந்தீப் ஷிண்டே எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீப்சே வழக்கு விசாரணை முழுவதும் சல்மான்கான் ஜாமீனில் இருப்பதால் நாளை (8–ந் தேதி) வரை 2 நாட்களுக்கு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார்.

இதனால் மாலை வரை கோர்ட்டிலேயே காத்து இருந்த சல்மான்கான் 2 நாள் இடைக்கால ஜாமீன் கிடைத்ததும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். உடனே அவர் காரில் ஏறி வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். ஆனால் சல்மான்கான் வாடிய முகத்துடன் நேராக வீட்டுக்குள் சென்றார்.

நாளை மும்பை ஐகோர்ட்டில் சல்மான்கான் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறுகிறது. மேலும் தீர்ப்பை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் மனுவும் தாக்கல் செய்கிறார்.

இந்த மனுவும் நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. சல்மான்கானுக்கு ஜாமீன் கிடைத்தால் விடுதலை செய்யப்படுவார். இல்லையென்றால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

 


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions