துபாய் செல்வதற்கு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்ட சல்மான் கான்

Bookmark and Share

துபாய் செல்வதற்கு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்ட சல்மான் கான்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து வழக்கில் பெயிலில் விடுவிக்கப்பட்ட நடிகர் சல்மான் கான் நேற்று, மும்பை உயர் நீதிமன்றத்தில் துபாய் செல்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். 

பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மே 6-ம் தேதி சல்மான் கானுக்கு,  5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே 48 மணி நேர இடைக்கால பெயில் வழங்கப்பட்டது. இறுதியாக மே 8-ம் தேதி பெயில் கிடைத்தது. இருப்பினும் அவரை பிணையில் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றம் இந்தியாவை விட்டு வெளியேறினால் நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுருத்தியிருந்தது. 

இந்நிலையில், துபாயில் வருகிற 29-ம் தேதி பாலிவுட் நடிகர்களுக்கான 2015-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ப்ரியங்கா சோப்ரா, ஜாக்குலின் ஃபெர்னான்டெஸ், வருன் தவான், பெரிநீதி சோப்ரா, நேஹா துபியா போன்றோரும் கலந்துகொள்கின்றனர். 

இதில் ஜாமினில் வெளிவந்திருக்கும் பாலிவுட் ஹீரோ சல்மான் கானும் கலந்துகொள்வார் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பயணத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை.


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions