விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?

Bookmark and Share

விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்பவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாகத்தான் ஒப்பந்தமானார் டெய்சி. அவருக்கான மாற்றும் நடிகையை கடந்த சில நாட்களாக படக்குழு தீவிரமாக தேடி வந்தனர்.

அண்மையில் அந்த ரோலில் நித்யா மேனன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நாம் கூறியிருந்தோம். ஆனால் தற்போது அவருக்கு பதிலாக இந்த ரோலில் தன்னுடைய தோழியும் பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்கவைக்க சல்மான் கான் திட்டமிட்டு வருகிறாராம். இதற்காக ராஜமௌலியிடம் சிபாரிசும் செய்திருக்கிறாராம்.

இதனால் நித்யா மேனனும் அவருடைய ரசிகர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட், சீதா எனும் கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ எனும் தலைப்பிற்கான முழு அர்த்தம் என்னவென்பதை படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அது முடிவானதும் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions