கார் விபத்து வழக்கில் 5 ஆண்டு ஜெயில்: சல்மான்கான் தண்டனை நிறுத்தி வைப்பு

Bookmark and Share

கார் விபத்து வழக்கில் 5 ஆண்டு ஜெயில்: சல்மான்கான் தண்டனை நிறுத்தி வைப்பு

2002–ம் ஆண்டு நடந்த கார் விபத்து வழக்கில் கடந்த 6–ந் தேதி நடிகர் சல்மான்கானுக்கு மும்பை செசன்ஸ் கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. அன்றைய தினம் அவருக்கு முழு தீர்ப்பு நகல் வழங்கப்படாததால் அதை காரணம் காட்டி மும்பை ஐகோர்ட்டு அவருக்கு 2 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனால் சல்மான்கான் கைது செய்யப்படவில்லை.

வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். 2 நாள் இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைகிறது. இதற்கிடையே தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், முழுஜாமீன் வழங்கக் கோரியும் சல்மான்கான் தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று நீதிபதி ஏ.எம்.திப்சே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சல்மான்கான் தரப்பில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, ஸ்ரீகாந்த் ஷிவடே ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

அப்போது சல்மான்கான் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர விசாரிக்கப்படவில்லை என்று கூறி பல்வேறு குறைபாடுகளையும், குளறுபடி களையும் எடுத்துக் கூறினார். எனவே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். பின்னர் அரசு தரப்பு வக்கீல் வாதம் செய்தார். அவர் சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதத்துக்குப் பின் சல்மான்கானுக்கு கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் அவருக்கு முழு ஜாமீன் வழங்குவதாகவும் நீதிபதி திப்சே தீர்ப்பு கூறினார்.

மேலும் அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும் நீதிபதி அறிவித்தார். சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராகி ரூ.30,000 மதிப்புள்ள ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு காரணமாக சல்மான்கான் ஜெயிலுக்கு போவது தவிர்க்கப்பட்டது. இதனால் சல்மான்கான் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஏற்கனவே கீழ்கோர்ட்டில் சல்மான்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்ததால் இன்றைய விசாரணைக்கு அவர் ஆஜராக தேவையில்லை என்பதால் சல்மான்கான் கோர்ட்டுக்கு வரவில்லை. தீர்ப்பை கேட்க சல்மான்கான் சகோதரி அல்விரா, மானேஜர் ரேஷ்மா, குடும்ப நண்பர் பாபா சித்திக் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். கோர்ட்டுக்கு வெளியே ஏராளமான குடிசைப் பகுதி மக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

வீட்டில் இருக்கும் சல்மான்கானை நேற்று மராட்டிய நவ நிர்மான்சேனா தலைவர் ராஜ்தாக்கரே, நடிகர் அமீர்கான், கரன் ஜோகர், நடிகைகள் கரீனா கபூர், சோனாக்ஷி சின்கா உள்பட ஏராளமான பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இன்று ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்பட இருப்பதையொட்டி சல்மான்கான் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

மும்பை ஐகோர்ட்டு முன்பு ஏராளமான ரசிகர்கள் தீர்ப்பை கேட்க வந்து குவிந்து இருந்தனர். திடீர் என்று ஆவேசம் அடைந்த ரசிகர் ஒருவர் கோர்ட்டு வளாகத்தில் சல்மான்கனை விடுதலை செய்யக் கோரி கோஷமிட்டவாறு விஷம் குடித்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Post your comment

Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions