ஷாருக்கான், சல்மான் கான் இத்தனை கோடிகள் சம்பாதிக்கிறார்களா?

Bookmark and Share

ஷாருக்கான், சல்மான் கான் இத்தனை கோடிகள் சம்பாதிக்கிறார்களா?

2015ம் வருடம் முடிவை நெருங்கி விட்டது. 2016 துவங்க உள்ள நிலையில் பல சர்வேக்கள் படையெடுக்கத் துவங்கிவிடும். இதில் முதல் கட்டமாக யார் அதிகம் இந்த வருடம் சம்பாதித்தவர்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது.ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில்  சினிமா பிரபலங்களும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுமே அதிகமாக இடம்பிடித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் இருந்த சல்மான் கான் இந்த முறை இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தில் பாலிவுட்டின் கிங் கான் நடிகர் ஷாருக்கான் 257 கோடிகளுடன் இருக்கிறார். சல்மான் கான் 202 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், அமிதாப் பச்சன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தோனி , அமீர்கான், அக்‌ஷய் குமார், விராட் கோலி, சச்சின், தீபிகா படுகோன், ஹ்ருத்திக் ரோஷன் முறையே முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் 19 புது வரவுகளும் அடக்கம். அதில் முக்கியமாக ராஜமௌலி, பிரபாஸ் இருவரும் முதல்முறையாக இடம்பிடித்துள்ளனர்.

காரணம் சொல்லவா வேண்டும் பாகுபலியே எனலாம். இது தவிர்த்து சஞ்சய் லீலா பன்சாலி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் தங்களது இடங்களை தவறவிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் அரசியல் பிரமுகர்கள் தென்படவேயில்லையே என நீங்கள் நினைக்கிறீர்களா?... அவர்களின் வருமானங்கள் என்னைக்கு பாஸ் கணக்கில் காட்டப்பட்டன. 


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions