நான் சூர்யாவின் தீவிர ரசிகை: சமந்தா

Bookmark and Share

நான் சூர்யாவின் தீவிர ரசிகை: சமந்தா

நடிகை சமந்தா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

என் வாழ்க்கையில் எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. நாளை என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது. என்றாலும் நல்லது நடக்கும் என்று நினைத்தால் நிச்சயம் நடக்கும்.

நான் சூர்யாவின் ரசிகை. எனது கல்லூரி நாட்களில் சூர்யாவை நேரில் பார்க்க முடியுமா என்று எண்ணி இருக்கிறேன். ‘காக்க காக்க’ படம் பார்த்த பிறகு அவரது தீவிர ரசிகையாகி விட்டேன். எப்போதும் கல்லூரி கலை விழாக்களில் கடைசி இருக்கையில்தான் உட்கார்ந்திருப்பேன்.

ஒருமுறை சூர்யா எங்கள் கல்லூரிக்கு வந்தார். நான் முன் வரிசையில் இடம் பிடித்து ‘சூர்யா... சூர்யா...’ என்று கூச்சல் போட்டு கலாட்டா செய்ததை பார்த்து என் தோழிகளே அசந்து போய் விட்டார்கள்.

இப்போது நான் சூர்யாவின் ஜோடியாக நடித்து விட்டேன். இது போன்ற அதிசயங்கள் எல்லோருக்கும் நடக்கும். கனவு நனவாகும் காலம் வரும்.

தமிழ் படங்களில் முதல் முறையாக எனது சொந்த குரலில் பேசி இருக்கிறேன். தமிழ் எனது சொந்த மொழி. விரைவில் தெலுங்கு படங்களிலும் சொந்த குரலில் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
மீண்டும் மாமனாருடன் நடிக்கும் சமந்தா – ஆனால் அப்படி இல்லையாம்!
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions