நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமந்தா!

Bookmark and Share

நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமந்தா!

கதாநாயகிகள் என்றாலே அவர்கள் 2 பாடல்களில் வந்து ஹீரோவுடன் நடனமாடுவதைப்போல்தான் பெரும்பாலான படங்களில் யூஸ் பண்ணி வருகிறார்கள். அதனால் தொடர்ந்து அப்படியே நடிக்க வைப்பதால் போரடித்துப்போகும் சில நடிகைகள் எங்களை பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய காட்சிகளிலும் நடிக்க வையுங்கள் என்று டைரக்டர்களை கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இந்த விசயத்தில் சமந்தா ரொம்ப வித்தியாசமானவராக இருக்கிறார். அதாவது, எந்த படமாக இருந்தாலும் ஒரு 3 பாடல்களிலாவது நான் நடனமாட வேண்டும் என்று கேட்டு வாங்கி நடிக்கிறாராம்.

காரணம், தெலுங்கு சினிமாவில் தனது நடனத்தின் மூலமே பெருவாரியான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சமந்தா, தமிழிலும் அதேபோல் நடனத்தினால் ரசிகர்களை இழுக்க வேண்டும் எனறு ஆசைப்படுகிறாராம்.

அந்தவகையில், அஞ்சான், கத்தி படங்களிலேயே தனது நடனத்திறமையை நிரூபித்து விட்ட சமந்தா, இயற்கையிலேயே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், ஒவ்வொரு படங்களிலுமேதான் ஸ்பாட்டுக்கு வந்து நடனத்தை ரிகர்சல் பார்ப்பதிலையாம்.

படப்பிடிப்புக்கு முன்பே சம்பந்தப்பட்ட நடன மாஸ்டர்களை வரவைத்து, ஆட வேண்டிய பாடலைப்போட்டு ஓரளவு ரிகர்சல் பார்த்துக்கொண்டே ஸ்பாட்டுக்கு வருகிறாராம். மேலும், சமந்தாவுக்கு நடனத்தை மையமாகக்கொண்ட ஒரு அதிரடியான படத்தில் நடிக்க வேண்டும் என்கிற எதிர்கால ஆசையும் உள்ளதாம்.


Post your comment





Related News
நான் கர்ப்பமா? சமந்தாவே சொன்ன பதில் இதோ!
மீண்டும் மாமனாருடன் நடிக்கும் சமந்தா – ஆனால் அப்படி இல்லையாம்!
மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா
நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions