ராஜமௌலியின் பிரமாண்ட படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா சமுத்திரக்கனி?

Bookmark and Share

ராஜமௌலியின் பிரமாண்ட படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா சமுத்திரக்கனி?

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் ராம் சரண் ஜோடியாக அலியா பட் நடித்து வருகிறார். இப்படத்தில் குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்பவர் திடீரென இந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து அவர் ரோலில் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.இது ஒருபக்கம் இருக்க இப்படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இவர் இப்படத்தில் ஜூனியர் என்டிஆரின் மாமாவாக பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் ஒரு புரட்சியாளர் ரோலில் நடித்து வருகிறாராம். 


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions