சாட்டை-2 வை உருவாக்கும் சமுத்திரக்கனி

Bookmark and Share

சாட்டை-2 வை உருவாக்கும் சமுத்திரக்கனி

இயக்குனராக தொடங்கிய சமுத்திரக்கனி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பாயும் புலி’ படத்தில் விஷாலுக்கு அண்ணனாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார். 

மேலும் இவர் பிரபுசாலமன் தயாரிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த ‘சாட்டை’ படமானது 2012ம் ஆண்டு வெளியானது. இப்படம் சமுத்திரக்கனிக்கு நல்ல பெயரை தேடித்தந்தது. மாணவர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சமுத்திரக்கனி முடிவு செய்துள்ளார். இந்த முறை பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்?   பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை மையமாக வைத்து தந்தை-மகன் பற்றிய கதை.

இந்த படத்திலும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்ற கணிப்பு மிக்க தந்தையாக நடிக்கிறார். ‘சாட்டை 2’ படத்தை சமுத்திரக்கனியே எழுதி இயக்கி நடிக்கவுள்ளார். 

 


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா
மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions