மலையாளத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சமுத்திரக்கனி..!

Bookmark and Share

மலையாளத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சமுத்திரக்கனி..!

பொதுவாக மலையாளத்தில் வெளியாகும் ஒரு படம்தான், அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். அந்த வழக்கத்தை உடைத்தது சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' படம்.

இந்தி, தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்தப்படம், மற்ற மொழிப்படங்களை ரீமேக் செய்யவிரும்பாத மலையாளத்திரையுலகிலும் நான்காவதாக ரீமேக் செய்யப்பட்டு சாதனை படைத்தது.

சமுத்திரக்கனியின் படங்களைப்போல அவரது நடிப்புக்கும் மலையாளம் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய மரியாதை உண்டு. இயக்குனராக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தும் சமுத்திரக்கனியை. தன்னம்பிக்கையின் மறு உருவம் என  தாராளமாக சொல்லலாம்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த 'சிகார்' படத்தில் நக்சலைட் தலைவராகவும், 'டி கம்பெனி' படத்தில் மாவோயிஸ்ட் தலைவராகவும் நடித்திருந்தார். படங்களில் அவரை போலீஸ் துரத்தியதுபோக, இன்னொரு பக்கம் அவரை போலீஸ் கேரக்டர்களும் விடாமல் துரத்துகின்றன.

'ஈசன்', சமீபத்தில் வெளியான 'சண்டமாருதம்' ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த சமுத்திரக்கனி மீண்டும் மலையாளத்தில் 'தி ரிப்போர்ட்டர்' என்கிற படத்தில் டெபுடி சூப்பிரண்டென்ட் பார்த்தசாரதியாக நடிக்கிறார்.

இது மலையாளத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ஆறாவது படமாகும். இவருடன் இணைந்து 'நாடோடிகள்' படத்தில் இவரால் அறிமுகம் செய்யப்பட அனன்யாவும் அபிநயாவும் நடிக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

தேசிய விருது பெற்ற காமெடி நடிகர்களான சலீம்குமார், சுராஜ் வெஞ்சாரமூட் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வேணுகோபன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் பிப்-27ஆம் தேதி ரிலீசாகிறது.


Post your comment





Related News
ராஜமௌலியின் பிரமாண்ட படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா சமுத்திரக்கனி?
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..!
சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions