சண்டைக்கோழி 2–ம் பாகம் தயாராகிறது: விஷால் ஜோடி அக்ஷரா?

Bookmark and Share

சண்டைக்கோழி 2–ம் பாகம் தயாராகிறது: விஷால் ஜோடி அக்ஷரா?

விஷால், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்து 2005–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘சண்டைக்கோழி’. லிங்குசாமி இயக்கி இருந்தார். தாவணி போட்ட தீபாவளி, என்னமோ நடக்கிறதே கேட்டா கொடுக்கிற பூமி போன்ற இனிய பாடல்கள் படத்தில் இடம் பெற்று இருந்தது. 

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க லிங்குசாமி திட்டமிட்டு உள்ளார். இதற்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. சண்டைக்கோழி இரண்டாம் பாகத்திலும் விஷாலே நாயகனாக நடிக்கிறார். நாயகி தேர்வு நடக்கிறது. கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. 

அக்ஷரா இந்தியில் ஷமிதாப் படத்தில் அமிதாப்பச்சன், தனுசுடன் நடித்து பிரபலமானார். முதல் பாகத்தில் நடித்த மீராஜாஸ்மினும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions