குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்

Bookmark and Share

குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் சஞ்சய் இயக்கிய குறும்படம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகிறது. ஜங்‌ஷன் என்று பெயரிடப்பட்ட அந்த குறும்படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக அமைந்துள்ளது. தன்னை ராக்கிங் செய்யும் ரோகித் என்பவரை தாக்க முடிவு செய்து செல்கிறார் ஜேசன்.

ரோகித் வருகைக்காக ஒரு இடத்தில் காத்திருக்கிறார். கையில் கிரிக்கெட் மட்டையுடன் வரும் ரோகித் மீது அந்த வழியாக வந்த கார் மோதவே ஜேசன் அதிர்ச்சி அடைகிறார்.

காரில் இருந்து இறங்கிய வாலிபர் கிரிக்கெட் மட்டையையும், ஜேசனையும் மாறி மாறி பார்த்தபோது தாக்கப் போகிறார் என்று நினைத்தால் ஒன்றும் நடக்கவில்லை. ரோகித்தை காப்பாற்றாமல் கிளம்பிச் சென்றுவிடுகிறார்.

அந்த நபர் கிளம்பிய பிறகு ரோகித் அருகே வந்து பார்க்கும் ஜேசன் அதிர்ச்சியில் உறைகிறார். ஜேசன் சஞ்சயின் நண்பர்கள் இருவர் வந்து அவரை அழைத்துக் கொண்டு செல்வது போன்று குறும்படம் முடிகிறது.

குறும்படத்தில் தமிழை விட ஆங்கிலத்தில் அதிகமாக பேசுகிறார்கள். இந்த குறும்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?
மீண்டும் மோதும் தனுஷ், விஜய் சேதுபதி - இந்தமுறை எப்படி தெரியுமா?
தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் - பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions