படங்களை எடுப்பது ஈஸி, ரிலீஸ் செய்வது கஷ்டம்: சந்தானம் பேட்டி

Bookmark and Share

படங்களை எடுப்பது ஈஸி, ரிலீஸ் செய்வது கஷ்டம்: சந்தானம் பேட்டி

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இனிமே இப்படித்தான்’. இதில் நாயகிகளாக ஆஷ்னா, அகிலா நடிக்கின்றனர். முருகன், ஆனந்த் ஆகியோர் இயக்குகின்றனர். இந்த படத்தை சந்தானமே தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இப்படம் குறித்து சந்தானம் அளித்த பேட்டி வருமாறு:– 
‘இனிமே இப்படித்தான்’ படத்தை முதல் தடவை நானே தயாரித்து ரிலீசும் செய்கிறேன். படங்கள் எடுப்பது ஈஸி ரிலீஸ் செய்வதுதான் கஷ்டம். படத்தின் பெயரை பதிவு செய்வதில் இருந்து அதை தியேட்டருக்கு கொண்டு வருவதுவரை நிறைய கஷ்டப்பட வேண்டி உள்ளது. 

இந்த படத்தின் கதை யதார்த்தமாக இருக்கும். காமெடி, சென்டிமென்டும் உள்ளது. இளைஞர்களுக்கு தேவையான ஒரு விஷயத்தையும் வைத்து உள்ளோம். இனிமேல் தொடர்ந்து கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று சொல்ல மாட்டேன். எனக்கு வசதியாக இருக்கும் சூர்யா, சிம்பு, உதயநிதி போன்ற ஹீரோக்களுடன் இணைந்து காமெடி வேடங்களிலும் நடிப்பேன். 

கதாநாயகன் ஆனதால் ஆர்யா அறிவுரைப்படி உடம்பை குறைத்தேன். என்ன டிரெஸ் அணிய வேண்டும் என்பது பற்றி சிம்பு சொல்லி கொடுத்தார். ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் நான் நேரடியாக பார்த்த சில விஷயங்கள் நண்பர்களின் காதல் சமாசாரங்கள், வசனம் போன்றவற்றை அப்படியே வைத்து உள்ளோம். 

நடனம் கற்று ஆடவும் செய்துள்ளேன். நல்ல படமாக வந்துள்ளது. ஆக்ஷன் படங்களில் நடிப்பது பற்றி சிந்திக்கவில்லை. எனக்கு காமெடி வரும். அது சார்ந்த படங்களாக நடிப்பேன். 
இவ்வாறு சந்தானம் கூறினார்.


Post your comment





Related News
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா?
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
எது சூப்பர் வேலைக்காரனா? சக்க போடு போடு ராஜாவா? - சந்தானம் ஒபன் டாக்.!
சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ!
முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.!
அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions