சந்தானத்துக்கு ஐடியா கொடுத்த மூன்று ஹீரோக்கள்!

Bookmark and Share

சந்தானத்துக்கு ஐடியா கொடுத்த மூன்று ஹீரோக்கள்!

சந்தானம் ஹீரோவாகிறார் என்றதும் அவரை போட்டியாக நினைக்காமல் முழு ஹீரோவாக எப்படியெல்லாம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்ற அவருக்கு சிம்பு, ஆர்யா, உதயநிதி ஆகியோர் ஐடியா கொடுத்தார்களாம். இந்த தகவலை இனிமே இப்படித்தான் படத்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்தார் சந்தானம்.

இதுபற்றி அவர் கூறுகையில், நான் ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று முதலில் ஆர்யாவிடம்தான் சொன்னேன். உடனே என்னை வாழ்த்திய அவர், முதலில் உடம்பை குறைக்க வேண்டும் என்றுதான் அட்வைஸ் செய்தார். அடுத்து இப்போது இருக்கிற நடனம் பத்தாது.

இன்னும் நன்றாக ஆட வேண்டும் என்றார். அதையடுத்து, சிம்பு ஒரு ஹீரோ எப்படி எப்படி டிரஸ் பண்ண வேண்டும் என்று ஐடியா கொடுத்தார். டிரஸ்ஸிங் சென்சே இல்லாத நான் அதன்பிறகுதான் நார்மலாக டிரஸ் அணிவதை நிறுத்தி விட்டு அவர் கொடுத்த ஆலோசனையை பின்பற்றத் தொடங்கினேன்.

பின்னர் உதயநிதி, ஒரு படத்தை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்தார். அது கஷ்டமான வேலைதான் என்றாலும், அவர் அனுபவசாலி என்பதால் அதை ஏற்றுக்கொண்டு இப்போது எனது படத்தை நானே ரிலீஸ் பண்ணும் அளவுக்கு தேறி விட்டேன்.

அந்த வகையில், என் வளர்ச்சிக்கு சிம்பு, ஆர்யா, உதயநிதி ஆகிய 3 பேரும் உதவி செய்திருக்கிறார்கள் என்கிறார் சந்தானம். 

 


Post your comment





Related News
இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions