தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்த சரத்குமார்

Bookmark and Share

தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்த சரத்குமார்

நடிகர் சங்கதேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. 

தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார்.

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். 

தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தி.நகர் அபிபுல்லா சாலையில் பழைய நடிகர் சங்க கட்டிடம் அருகே உள்ள அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன.

தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் சரத்குமார் இன்று காலை தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அவரது அணியினரும் சென்றிருந்தனர். 

சரத்குமார் அணியில் மற்ற பதவிக்கு போட்டியிடுபவர்களின் பட்டியல் தயாரானதும் மற்றவர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions