சரத்குமார் நிஜ வாழ்க்கையிலும் நாட்டாமை தான்! - ராதாரவி

Bookmark and Share

சரத்குமார் நிஜ வாழ்க்கையிலும் நாட்டாமை தான்! - ராதாரவி

நடிகர் சங்கத்தில் பொருளாளராக இருந்து வருபவர் நடிகர் ராதாரவி. அவர், நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் பற்றி சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருவதாக கூறுகிறார். அதுபற்றி அவர் மேலும் கூறுகையில், நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் சினிமா உலகில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினை என்றாலும் தான் முன்னின்று தீர்த்து வைத்து வருகிறார்.

அந்தவகையில் எப்போது நாட்டாமை படத்தில் நடித்தாரோ அப்போதில் இருந்தே அவர் நிஜ வாழ்க்கையிலும் நாட்டாமை வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அதோடு, நடிகர் நடிகைகளின் பிரச்சினை எதுவாக இருந்தாலும் தனது வேலைகளை போட்டு விட்டு அதை தனது பிரச்சினையாக நினைத்து பேசி நல்ல முடிவுகளை ஏற்படுத்தி வருகிறார்.

இருப்பினும் சிலர் அவரை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே சரத்குமார் பற்றிய தவறான வதந்திகளை பரப்பி விட்டு வருகின்றனர். குறிப்பாக, விஜயகாந்த் நடிகர் சங்க பதவியில் இருந்து சென்றபோது, அவர் 3 கோடி ரூபாயை கணக்கில் வைத்து விட்டு சென்றதாக சொன்னார்கள்.

ஆனால் அவர் வைத்து விட்டு சென்றதோ ஒரு கோடிதான். இதை நான் சொன்னபோது யாரும் நம்பவில்லை. அதையடுத்து, ஒரு ஜென்ட்ரல் பாடி மீட்டிங் நடந்தபோது, கடைசியாக விஜயகாந்த் பொறுப்பில் இருந்து விலகும்போது பேசிய ஒரு வீடியோவை போட்டுக்காண்பித்தேன்.

அதில் நடிகர் சங்க கணக்கில் ஒரு கோடி ரூபாய் இருப்பதாக அவர் அந்த வீடியோவில் பேசியிருந்தார். அதையடுத்து வதந்தி பரப்பியவர்கள் அனைவரும் வாயடைத்து விட்டனர். ஆக, அப்படி வதந்தி பரப்பியவர்கள் இப்போதுவரை ஏதாவது ஒரு தவறான செய்திகளை வெளியிடுவதே வேலையாகக்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் பொய் ஒருநாளும் வாழாது. உண்மைதான் என்றைக்கும் ஜெயிக்கும் என்கிறார் ராதாரவி.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions