பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தன்னுடைய பிறந்தநாளை இன்று கோலகலமாக கொண்டாடினார்!

Bookmark and Share

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தன்னுடைய பிறந்தநாளை இன்று கோலகலமாக கொண்டாடினார்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை இன்றுகொண்டாடினார். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார் , நடிகர் சங்க நிர்வாகிகள்மனோபாலா , குட்டி பத்மினி , உதயா , ரமணா , ஹேமசந்திரன் , அயுப் கான்ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி அவர்கள் பேசியது , நான் முதலில்நடிகர் சிவகுமார் அவர்களிடம் தான் சென்னைக்கு வந்து பிறந்த நாள்கொண்டாடுவது பற்றியும் நிவாரண நிதி வழங்குவது பற்றியும் கூறினேன். நான்அதை பற்றி அவரிடம் கூறியதும் உடனே ஏற்பாடு செய்துவிடலாம் என்று கூறிஎன்னை உற்சாகப்படுத்தினார்.

நடிகர் சிவகுமார் மிகவும் நல்ல மனிதர் ,எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றநிர்வாகிகள் அனைவருக்கும் நான் என்னுடைய வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.

நான் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய நடிகையாக வலம்வந்த போதுநடிகர் சங்கத்துக்கு ரூபாய் 5௦,௦௦௦ நன்கொடையாக வழங்கினேன். அப்போதையநடிகர் சங்க நிர்வாகியான திரு.வி.கே.ராமசாமி அவர்கள் நான் ரூபாய் 5௦,௦௦௦நன்கொடை அளித்திருக்கிறேன் என்று என்னை பெரிதும் பாராட்டினார்.

ஏனென்றால் அப்போதைய காலத்தில் அது மிகப்பெரிய தொகையாகும். ஆனால் அந்த பணத்திற்கானரசீதும் வரவில்லை , அந்த பணம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
ஆனால் இப்போது வந்துள்ள நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்கள்அனைவரும் இளைஞர்கள்.

அவர்கள் அனைவருக்கும் திரைத்துறையில் நடிகர்களின் கஷ்டநஷ்டங்கள் அனைத்தும் நன்கு அறிந்து அனைவரும் மிகவும் துடிப்பாகசெயல்பட்டு வருகின்றனர். நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்குபுகுந்த வீடு சென்னை தான்.

என்னுடைய உயிர் பிரிந்தால் கூட சென்னையில்தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிராத்திப்பது உண்டு. என்னுடையகணவர் கூறியது போல் அனைத்தும் நடந்து வருகிறது.

இன்று நானும் உண்டுமற்றவர்களுக்கும் அளிக்கும் அளவுக்கு இறைவன் என்னை நல்ல இடத்தில்வைத்துள்ளான். என்னுடைய வாழ்க்கையில் என்னால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்அவர்களை மட்டும் மறக்கவே இயலாது.

அவரும் நானும் இணைந்து நடித்த நாடோடி மன்னன் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து படத்தை கலர் படமாகமாற்றினார். அதற்க்கு காரணம் யாதெனில் நான் அந்த படத்தில் அறிமுக நடிகை ,என்னை ரசிகர்கள் ஏற்று கொள்வதற்காக, படத்தில் நான் வரும் பகுதியில் இருந்து படத்தை கலர் படமாக மாற்றி இருக்கிறார்.

அதே நேரத்தில் எதிர்பார்த்தது போல் அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகுநானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தோம். எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்தவர் அவர் , நான் எப்படி பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்என்பது முதல் பல நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார்.

என்னால்நிச்சயம் அவரை ஒருபோதும் மறக்கவே முடியாது. அவருடைய ராமாபுரம் தோட்டத்தைபார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எல்லோரும் அவரைதெய்வம் என்று சொல்லுவது உண்டு. நானும் அவருடைய ராமாபுரம் இல்லத்துக்குசென்று பல முறை உணவு உண்டுள்ளேன் , பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன்.

அதனால் நீங்கள் அவர் அவரை தெய்வம் என்று கூறுவதோடு நிறுத்திவிடாமல்அவருடைய இருப்பிடம் என்பது தெய்வம் வாழும் இடம் போல் புனிதமாக கோவில்போல் இருக்க வேண்டும்.

அவரால் வந்தவர் இந்த சரோஜா தேவி , அவர் இல்லை என்றால் இந்த சரோஜா தேவியே இல்லை. நான் நடிகர் சிவாஜி அவர்களுடன்நடித்துள்ளேன் , அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன் , ஜெமினி கணேஷன்அவர்கள் எனக்கு நல்ல நண்பர் , நடிகர் சிவகுமார் மிகச்சிறந்த மனிதர் அவரிடமிருந்து நான் நிறைய நல்லொழுக்கங்களை கற்றுள்ளேன்.

அவருடையபுதல்வர்களும் அதே போல் மிகச்சிறந்த முறையில் வளர்ந்துள்ளனர். ஆதவன்படத்தின் படபிடிப்பின் போது நடிகர் சூர்யா என்னை மிகவும் கவனமாகபார்த்துக்கொண்டார்.

நடிகர் சிவகுமார் அவர்களுடைய அதே குணம் அப்படியேஅவருடைய புதல்வர்களுக்கும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்குசென்னைக்கு வருவது மிகவும் பிடிக்கும். நான் இங்கே சென்னைக்கு வந்தால்அனைவரும் என்னை பார்க்க வந்துவிடுவார்கள்.


முற்காலத்தில் நமது தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் தான் தெலுங்கு ,கன்னடம் , மலையாளம் போன்ற திரையுலகங்கள் இணைந்திருந்தது. இப்படிபாரம்பரியமிக்க நமது நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றியமைக்க வேண்டும் என்றகோரிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை.

தென்னிந்திய நடிகர் சங்கம் என்றால்நான்கு மொழியை சேர்ந்தவர்களும் தான் இங்கே நடிக்கின்றோம்.கலையுலகத்துக்கு மட்டும் தான் ஜாதி , மொழி என்ற வேறுபாடு ஏதும் இல்லாமல்இருந்தது.

எந்தவித வேறுபாடும் இல்லாமால் தொடரவேண்டும் என்பதற்காக தான்நாங்கள் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரிலேயே நடிகர் சங்கத்தைதொடர்கிறோம். கலையுலகத்தில் பிரிவினை தவறு.

அப்படி பாரம்பரியமான விஷயத்தைமாற்ற கூடாது. சீக்கிரமாக நடிகர் சங்கத்துக்கான இடத்தில் நடிகர் சங்ககட்டிடம் வரும். நடிகர் சங்கம் சார்பாக என்னை எந்த நிகழ்வுக்குஅழைத்தாலும் நான் கண்டிப்பாக வருவேன்.

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான் ரூபாய் 5லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். மற்றவர்களுக்குஉதவியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு நான் இதை வழங்கியுள்ளேன்.

நடிகர்நடிகைகள் யாருக்கும் வறுமை ஏற்ப்பட கூடாது. அவர்கள் நன்றாகவாழ்ந்துவிட்டு வறுமை கோட்டுக்கு கீழ் போனால் அது நிச்சயம் நன்றாகஇருக்காது. அதனால் வயதான நடிகர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் நடிகர் சங்கம் ஓய்வூதியும்வழங்கவுள்ளதாக நான் இவர்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். இதுமிகச்சிறந்த விஷயமாகும்.


Post your comment

Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions