சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Bookmark and Share

சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்க `சதுரங்க வேட்டை 2' என்ற படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அரவிந்த் சாமி தனது சம்பளபாக்கியான 1.79 கோடியை வட்டியுடன் அளிக்க வேண்டும் என்று மனோ பாலா மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கை விசாரித்து மனோ பாலா பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மனோபாலா பதில் மனுவில் அரவிந்த்சாமியுடன் சமரசமாக செல்லத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

ஐகோர்ட்டுக்கு தகவல் சொல்லாமல் தான் `சதுரங்க வேட்டை 2' படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்றும் முதல் தவணையாக 25 லட்சம் ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும் உறுதியாக கூறி இருந்தார்.

இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு மனோபாலா, அரவிந்த்சாமி இரு தரப்பினரும் அக்டோபர் 12-ந் தேதி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 


Post your comment





Related News
வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!
நூல் மாதிரி இருந்துட்டு இப்படி நூல் விடுறீங்களே பாஸு, ராஷ்மிகாக்கு மெசேஜ் அனுப்பிய தமிழ் நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு!
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
திருமணத்துக்கு பின் ஆர்யாவுக்கு ஏன் இந்த வேலை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions