ரஜினிக்கு வரவேற்பு, கமலுக்கு எதிர்ப்பு- சீமான்

Bookmark and Share

ரஜினிக்கு வரவேற்பு, கமலுக்கு எதிர்ப்பு- சீமான்

’நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ரஜினிகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப்  பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனரே? எனக் கேட்டதற்கு, பலகோடி தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஐயா திரு.ரஜினிகாந்த் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்தை நான்வரவேற்கிறேன். அவரது மதிப்பார்ந்த கருத்துக்கு நன்றி.  

கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் எனச் சொல்லியிருக்கும் கருத்தை நான் மதிக்கிறேன்.ஆனால், அதற்கு முன்பு கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா மாநிலங்களிலும் இந்திய நடிகர் சங்கம் என்று பெயர்  மாற்றிவிட்டு இந்த நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமென்றோ அல்லது அகில உலக நடிகர் சங்கம் என்றோ கூட மாற்றிக் கொள்ளட்டும்.  

அதே இந்தியப் பற்றோடு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீரை தமிழகத்திற்கு பெற்றுக்கொடுத்துவிட்டால் ரொம்ப மகிழ்ச்சியடைவோம்.

கேரளாவில், கேரள நடிகர் சங்கம் என்று தனியாக வைத்து கேரள நடிகர்கள் மலையாளிகளாகவே இருப்பர், ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து தெலுங்கராகவேஇருப்பர். கர்நாடகத்தில், கன்னட நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து கன்னடராகவே இருப்பர்.

நாங்கமட்டும் தென்னிந்தியான்னு வைக்க வேண்டுமா?  வேணாம். தமிழ் நடிகர்கள் சங்கமாக மாத்துங்க என்று சொன்னால் இந்தியான்னு வைக்கணும்??? இதையும் கேட்டுக்கிட்டு மானங்கெட்ட தமிழனா வாழ்ந்துக்கிட்டிருக்கோம், என்ன பண்றது?” என்று வேதனையோடுதெரிவித்தார்.  


Post your comment

Related News
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
கலக்கப்போவது யாரு செட்டுக்கு விசிட் அடித்த அனல் தெறிக்கும் அரசியல்வாதி
நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை
வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பதவிவெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி... எடப்பாடி அரசை விளாசிய சீமான்!
விஜய்க்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரை வைத்து பகலவன் படத்தை இயக்குகிறாரா சீமான்?
ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் - சீமான்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions