சீனி படத்தில் நடித்துள்ள எம்ஜிஆரின் உறவுக்கார யானை!

Bookmark and Share

சீனி படத்தில் நடித்துள்ள எம்ஜிஆரின் உறவுக்கார யானை!

சஞ்சீவி-ஓவியா ஜோடி சேர்ந்துள்ள படம் சீனி. இந்த படத்தை ராஜதுரை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராதாராவி, செந்தில், சரவணன், கஞ்சா கருப்பு, பவர்ஸ்டார் உள்பட 22 பிரபல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

அதோடு, சீதா என்கிற யானை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.  இப்படத்தில் நடித்துள்ள சீதா யானையைப்பற்றி இயக்குனர் ராஜதுரை கூறுகையில், இப்படத்தின் நாயகன் சஞ்சீவும், யானையும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்.

அதனால் பெரிதாக வளர்ந்த பிறகும் அவர்களது நட்பு தொடரும். இந்த யானை பிச்சை எடுக்காது. தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொடுத்து சாப்பிடும்.  ஆனபோதும் அதற்கு பசி ஒரு பிரச்னையாகவே இருக்கும்.

இந்நிலையில், ஒருமுறை, முதல்வர் எம்ஜிஆர் அந்த யானை இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் வருவார். அவரிடத்தில், இது உங்களது உறவுக்கார யானைதான் என்று அங்கிருப்பவர்கள் சொல்வார்களாம். எப்படி சொல்கிறீர்கள்? என்று எம்ஜிஆர் கேட்க, நல்ல நேரம் படத்தில் நடித்த உங்கள் ராமு யானையின் பேத்திதான் இந்த சீதா என்று விளக்கமளிப்பார்களாம்.

அதையடுத்து, ராமு பையன் இவ்ளோ வேலை பண்ணியிருக்கானா என்று சொல்லும் எம்ஜிஆர்., அந்த யானைக்கு பசிதான் ஒரு பிரச்னையாக இருந்து வருவதாக அவர்கள் சொல்லக்கேட்டு அது நிம்மதியாக சாப்பிடுவதற்கான அரிசி கிடைப்பதற்கு ஒரு ரேசன் கார்டு போட்டுக்கொடுப்பாராம் எம்ஜிஆர். இந்த காட்சி சீனி படத்தின் ப்ளாஸ்பேக்கில் வருகிறதாம்.

மேலும், இந்த படத்தின் யானைப்பாகனாக காமெடி நடிகர் செந்தில் நடித்திருக்கிறாராம். மதுரையைச் சேர்ந்த இந்த யானை மொத்தம் 20 நாட்கள் சீனி படத்தில் நடித்துள்ளதாம்.


Post your comment






Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions