வாலிப ராஜாவை தொடர்ந்து சேது நடிக்கும் புதிய படம்!

Bookmark and Share

வாலிப ராஜாவை தொடர்ந்து சேது நடிக்கும் புதிய படம்!

கண்ணா லட்டு திண்ண ஆசையா… வாலிபராஜா படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் சேது. இப்படங்களைத் தொடர்ந்து “ஆளுக்கு பாதி 50-50” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக 144 படத்தில் நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாலசரவணன், மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, லொள்ளு சபா ஸ்வாமிநாதன், மதன்பாபு, ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய், நான் கடவுள் ராஜேந்திரன், முண்டாசுப்பட்டி முனிஷ்கான், யோகி பாபு என பெரிய காமெடிப் பட்டாளங்களுடன் தொடங்கி உள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கதாநாயகியை பேசி வருகிறார்கள்.

R.K.பிரதாப் ஒளிப்பதிவு செய்ய, தரன் இசை அமைக்கிறார். ராஜா சேதுபதி எடிட்டிங் செய்கிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் கிருஷ்ண சாய். நகைச்சுவஜ் நிரம்பிய இத்திரைப்படத்தை Lipi Cine Craft V.N.Ranjith Kumar தயாரிக்கும் 2வது படம் இது.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கிருஷ்ண சாய் கூறியதாவது,

இன்று இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் மக்கள் திரையரங்கு செல்வது அவரவர் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரித்து மகிழவே… அதைத் திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளேன். சென்னை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. பாடல்கள் வெளிநாட்டில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions