ஷாருக்கான் கருத்துக்கு பா.ஜ.க., தலைவர்கள் விமர்சனம்

Bookmark and Share

ஷாருக்கான் கருத்துக்கு பா.ஜ.க., தலைவர்கள் விமர்சனம்

தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு இணையதளத்தில் ரசிகர்களிடையே உரையாடிய போது ஷாருக்கான் கூறியதாவதாவது:-

”இந்தியாவில் சகிப்புதன்மையின்மை தீவிரமடைந்து வருகிறது. மதம், படைப்பாற்றல் தொடர்பான சகிப்புத்தன்மை குறைந்து வருவதால், நாட்டுக்குதான் பாதிப்பு ஏற்படும்.

நம்முடைய நாடு வளர விரும்பினால், இந்தியாவில் நிலவும் பல்வகையான கலாச்சரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைத்து மதங்களும் சமமானது என்று நாம் நம்பவில்லை என்றால் நாடு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியாது.

மதம், படைப்பாற்றல் தொடர்பான சகிப்பின்மையைக் களைந்து, நாட்டை வளர்ச்சி அடைய செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் மதச்சார்பின்மையை வளர்க்க வேண்டும்.

இல்லை என்றால் தேசப்பற்றின் பெயரால் மோசமான செயல்கள் நடக்கும்” என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே பா.ஜ.க. தலைவர்கள் பல சர்சைகுரிய கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக ஷாருக்கான் இந்தியாவில் வசித்தாலும் அவருடைய இதயம் பாகிஸ்தானில் உள்ளது என்று பா.ஜ.க., தலைவர் கைலாஷ் விஜய் வர்கியா கூறியுள்ளார். 

மேலும் ஷாருக்கான் படங்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் வசூல் செய்கிறது, ஆனால் இது சகிப்புதன்மையின்மை நாடாக அவருக்கு தெரிகிறது. இதேபோல், பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வரும் பா.ஜ.க., பெண் எம்.பி சத்வி பிரச்சி, ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஏஜெண்ட் என்றும் அவர் பாகிஸ்தானுக்கே செல்லட்டும் என்று விமர்சித்துள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions