சமூக ஊடகங்களின் ராஜா, ராணியாக ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா தேர்வு

Bookmark and Share

சமூக ஊடகங்களின் ராஜா, ராணியாக ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா தேர்வு

சமூக ஊடகங்களின் ராஜா மற்றும் ராணியாக பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்திப்பட உலகமான பாலிவுட் சினிமா பற்றிய செய்திகளை சுடச்சுட வெளியிட்டு பிரபலம் அடைந்துவரும் சமூக (ஆன்லைன்) ஊடகமான 'பாலிவுட் லைப்', சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக பேசப்படும் நடிகர், நடிகை யார்? என வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. 

இந்தியாவையும் கடந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான இந்திப்பட பிரியர்கள் இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். சமீபத்தில் வெளியான இந்த வாக்கெடுப்பின் முடிவுகளின்படி நடிகர் ஷாருக்கான் சமூக ஊடகங்களின் ராஜாவாகவும், (King Of Social Media) நடிகை பிரியங்கா சோப்ரா ராணியாகவும் (queen Of Social Media) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்த தேர்வுக்கு நன்றி தெரிவித்து இன்று செய்தி வெளியிட்டுள்ள ஷாருக்கான்(49), 'உலகம் முழுவதிலும் இருந்து பல ரசிகர்கள் எனக்கு அன்பையும், ஆதரவையும் வாரிவழங்கி வருகின்றனர். முன்பெல்லாம், கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாக என்னை அவர்கள் தொடர்புகொண்டு வந்தனர். அவற்றின் வாயிலாகவே நானும் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தேன். 

தற்போது சமூக ஊடகங்களின் உதவியால் வாழ்க்கைமுறை மிகவும் சுலபமாகி விட்டது. இதன்மூலம் என்னை 'சமூக ஊடகங்களின் ராஜா' என்று தேர்வு செய்த 'பாலிவுட் லைப்' இணையதளத்துக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா, 'நான் எப்போதுமே ஒரு ராணியாக ஆசைப்படுவதுண்டு. இந்த விருது அந்த ராணி ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளது. என்னை 'சமூக ஊடகங்களின் ராணி' என தேர்வு செய்த அனைத்து ரசிகர்- ரசிகைகளுக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.


Post your comment

Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions