பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் திருமண கோலாகலம்

Bookmark and Share

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் திருமண கோலாகலம்

பல முன்னணி நடிகையருடன் கிசு கிசுக்கப்பட்ட, பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கு, ஒருவழியாக திருமணம் முடிந்தது. இதில், 40 பேர் மட்டுமே பங்கேற்றனர்.பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர், ஷாகித் கபூர், 34. ஜப் வீ மீட், ஹைதர், தில் மாங்கே மோர் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்தவர்.

பாலிவுட்டின் பிரபல நடிகையான கரீனா கபூரை, உயிருக்கு உயிராக காதலித்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இதன்பின், வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா, பிபாஷா பாசு, அனுஷ்கா சர்மா ஆகிய நடிகையருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.

ஷாகித் கபூரின் திருமண செய்தியை எதிர்பார்த்து, ஒட்டுமொத்த பாலிவுட்டும் காத்திருந்த நிலையில், பெற்றோரால் பார்த்து, நிச்சயிக்கப்பட்ட, டில்லியைச் சேர்ந்த, மீரா, 21, என்ற பெண்ணை, ஷாகித் கபூர், நேற்று திருமணம் செய்தார்.

மணப்பெண் மீராவின் பெற்றோர், ராதா சோமி என்ற அமைப்பை பின்பற்றுகின்றனர். ஷாகித் கபூர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.

ராதா சோமி என்பது, அளவற்று தூய அன்பின் அடிப்படையில் செயல்படும் அனைத்து மதத்துக்கும் பொதுவான அமைப்பு என, அதை பின்பற்றுவோர் கூறுகின்றனர்.

அந்த அமைப்பின் மரபுப்படி திருமணம் சடங்குகள் நடந்தன. திருமணம் முடிந்ததும், டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்து வைபவங்கள் நடந்தன. ஷாகித் கபூர், வெள்ளை நிறத்தில், எம்பிராய்ட் செய்யப்பட்டிருந்த குர்தா பைஜாமா அணிந்திருந்தார்.

மீரா, இளம் சிவப்பு நிறத்தில், எம்பிராய்ட் செய்யப்பட்ட, பஞ்சாபி ஸ்டைல், லெஹெங்கா என அழைக்கப்படும் புடவையை அணிந்திருந்தார். இவர்களின் திருமண வரவேற்பு, இம்மாதம், 12ல், மும்பையில் நடக்கவுள்ளது.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions