ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...

Bookmark and Share

ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...

காலை காட்சி பார்க்கும் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமான நடிகை ஷகீலா. ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகையே ஆட்டிப் படைத்தவர். மோகன்லால், மம்முட்டி படங்களை விட அவருடைய படம் வசூலைக் குவித்ததைக் கண்டு, அவருடைய படங்களுக்குத் தடை விதித்து கஷ்டப்பட்டு அங்கிருந்து அவரை தமிழ்த் திரையுலகிற்கு அனுப்பி வைத்தார்கள்.

அதன் பின் தமிழில் “தூள், அழகிய தமிழ் மகன், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்' ஆகிய படங்களில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பே அவர் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

அதன் பின் அது பற்றிய சத்தத்தையே காணோம். ஆனால், அவர் 'ரொமான்டிக் டார்கெட்' என்ற படத்தை இயக்கி முடித்தே விட்டாராம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் நரேஷ், ஸ்வேதா மற்றும் பலர் நடிக்க ஷகீலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions