ஐ படத்தின் மேக்கப் மேனையே எந்திரன்-2 க்கு ஒப்பந்தம் செய்த ஷங்கர்!

Bookmark and Share

ஐ படத்தின் மேக்கப் மேனையே எந்திரன்-2 க்கு ஒப்பந்தம் செய்த ஷங்கர்!

ரஜினியின் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படமான ‘எந்திரன்’ படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். மேலும் இப்படம், வசூலிலும் பிரம்மாண்டம் படைத்தது. 

இதுவரை எந்த படங்களும் செய்யாத வசூல் சாதனை படைத்த, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிரமாகவுள்ளார். இந்த படத்தில் ரஜினி, அர்னால்டு, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு மேக்கப் போடுவதற்கு ஏற்கெனவே ஷங்கரின் ‘ஐ’ படத்தில் பணியாற்றிய வோட்டா நிறுவனத்தின் ஷான் பூட், ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஷான்பூட் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்திற்கும் மேக்கப் போட ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

‘எந்திரன் -2’ படத்திற்காக வருகிற டிசம்பர் மாதம் ரஜினிக்கு மேக்கப் டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும், அதேநேரத்தில் ரஜினியின் டூப்புக்கும் மேக்கப் டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions