நீங்க ஏன் ஷங்கர் மாதிரி படம் எடுக்குறதில்ல – பிரபல இயக்குனரை மேடையிலேயே கிண்டல் செய்த சல்மான்கான்!

Bookmark and Share

நீங்க ஏன் ஷங்கர் மாதிரி படம் எடுக்குறதில்ல – பிரபல இயக்குனரை மேடையிலேயே கிண்டல் செய்த சல்மான்கான்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மும்பையில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியானது.

இவ்விழாவில் சல்மான்கான், கரன் ஜோகர் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முக்கியமான பிரபலங்கள் பலர் கலந்துகொண்டார்கள்.இதில் பேசிய சல்மான்கான், ” இயக்குனர் ஷங்கர் மிகவும் திறமையானவர்.

அவர் ஒவ்வொரு படத்தையும் பிரம்மாண்டமாக எடுக்கக்கூடியவர்” என்று கூறியபடியே “நீங்கள் ஏன் அப்படி எடுப்பதில்லை?” என இவ்விழாவை தொகுத்து வழங்கிய இயக்குனர் கரண் ஜோகரிடம் கேட்டார். இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்த கரணை பின்னர் சல்மான்கான் கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தினார். சல்மானும் கரணும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions