சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Bookmark and Share

சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக நாகராஜன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக தமிழக அரசிடம் கருத்து கேட்டபோது "சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது உண்மைதான் அதை அகற்ற கால அவகாசம் வேண்டும்.

தமிழக அரசு சிவாஜிக்கு மணி மண்டம் கட்டுகிறது. அந்த மணி மண்டபத்தில் இந்த சிலை வைக்கப்படும். மணி மண்டபம் கட்ட 2 ஆண்டுகள் ஆகும்" என்றது.

ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்காமல் நவம்பர் 16ந் தேதிக்குள் சிலையை அகற்ற காலக்கெடு விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் காலக்கெடுவை தளர்த்தியதோடு தமிழக அரசு நீண்ட காலம் காலஅவகாசம் கேட்க கூடாது என்று கூறி 2016ம் ஆண்டு அக்டோபர் 30ந் தேதிக்குள் சிலையை அகற்ற அறிவுறுத்தியது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவாஜி மணிமண்டம் அமைக்கும் கால அட்டவனையை நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்படைத்தது. 

வழக்கின் முடியில் "உச்சநீதிமன்றம் நன்கு ஆராய்ந்து காலக்கெடு வழங்கி உள்ளது எனவே  சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ள 2016 அக்டோர் 30ந் தேதிக்குள் (10 மாதங்கள்)  சிலையை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டதோடு வழக்கை 2016ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தது.

 


Post your comment

Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
எத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும்: கமல்ஹாசன் பேச்சு
சிவாஜி பட தலைப்பை கைப்பற்றிய விஷால்?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் - செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்
வீரசிவாஜி டீசரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!
வீரசிவாஜி படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!
மன்னவன் சென்றானடி! - இன்று சிவாஜி கணேசன் நினைவு தினம்
சிவாஜி மணிமண்டபம் கட்டக்கோரி ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions