திரையுலக பிரபலங்கள் நடித்த தேர்தல் விழிப்புணர்வு குறும்படம்!

Bookmark and Share

திரையுலக பிரபலங்கள் நடித்த தேர்தல் விழிப்புணர்வு குறும்படம்!

தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ‘100 சதவீத நேர்மை 100 சதவீத வாக்குப்பதிவு’ என்னும் இலக்குடன் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் சந்திரமோகன் மேற்பார்வையில் தேர்தல் முன்னோட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்தந்த மண்டலங்களில் கலை நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்பட தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதின் அவசியத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேரும் வகையில் திரையுலக பிரபலங்களுக்கு ராஜேஷ் லக்கானி அழைப்பு விடுத்திருந்தார்.

இளைய சமுதாயத்தினரை கவரும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு ஆவணப்படத்தில் நடிகர்-நடிகைகள் பங்கேற்கவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து முதல்கட்டமாக பஸ் நிலையங்களில் நடிகர்கள் அர்ஜூன், சூர்யா, சித்தார்த் உள்ளிட்ட பிரபலங்களின் உருவப்படத்துடன் தேர்தல் விழிப்புணர்வு பலகைகள் பொருத்தப்பட்டன. சினிமா வசனங்களை தேர்தல் வாக்கியங்களாக பயன்படுத்தி துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தென் மாவட்ட மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாகவும், சென்னையின் முக்கிய அடையாளமாகவும் கருதப்படும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி. பொருத்தப்பட்டு உள்ளன. பிரதான நுழைவுவாயில், 5-வது நடைமேடை, வடக்கு நுழைவுவாயில் உள்ளிட்ட 5 இடங்களில் டி.வி. பொருத்தப்பட்டு உள்ளன. இந்த டி.வி.க்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் பயணிகள் மத்தியில் நேற்று ஒளிபரப்பப்பட்டது.

இதில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர்கள் அர்ஜூன், சூர்யா, சசிகுமார், சமுத்திரகனி, நடிகை கவுதமி, சுஹாசினி மணிரத்னம், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், அவரது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையுமான தீபிகா பலிக்கல், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் இந்த குறும்பட காட்சியில் தோன்றுகின்றனர்.

6 நிமிடம் ஓடும் இந்த குறும்படத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், அது தனிமனித உரிமை என்றும் விளக்கும் வகையில் நடிகர்-நடிகைகள் பேசுகின்றனர்.

‘பணத்துக்காக விலை போகக்கூடாது என்றும், வாக்கு நமது பிறப்புரிமை என்றும் முழங்குகின்றனர். இறுதியில் அனைவரும் வாக்களிக்க உறுதிமொழி ஏற்குமாறு நமக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். இப்படியாக இந்த குறும்படம் முடிவடைகிறது.

இந்த 6 நிமிட காட்சியை ரெயில் நிலையத்துக்கு வரும் எல்லா பயணிகளும் நின்று பார்த்து விட்டு செல்கின்றனர். தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் திரையில் தோன்றும்போது சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் வலுக்கட்டாயமாக காட்சியை பார்த்துவிட்டே நகருகின்றனர். இந்த குறும்பட காட்சி சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் எடுத்த இந்த முயற்சி உண்மையிலே வரவேற்கத்தக்கது. இதுபோல எல்லா பஸ்-ரெயில் நிலையங்கள், பூங்காக்கள், கோவில்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்களில் இந்த குறும்படம் ஒளிபரப்ப வேண்டும்’’, என்றனர்.


Post your comment

Related News
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions